Wednesday, March 18, 2009

நண்பன் - மினேஷ்

மினேஷ் பத்தி சொல்லனும்னா, நெறைய சொல்லலாம். நாங்க ரெண்டு பெரும் பைக்ல டிரைவ் பண்ணி கிட்டே பேச ஆரம்பிச்சா, ஒரே காமெடிய இருக்கும். எதாவது பண்ணி கிட்டே இருப்பான். ரெண்டு நிமிஷம் சும்மா இருக்க முடியாது. ரெண்டு, மூனு, நிமிஷத்துல வெடிகுற மாதிரீ ஒரு டைம் பாம் கட்டி விட்டா, நீங்க எப்பிடி, என்ன பண்ணுவீங்க? அப்பிடி துரு துறுன்னு இருப்பான். என்னோட நண்பர்கள்ல முக்கியமானவன்.

நாங்க நண்பர்கள் ஆனதே, ஒரு காமெடி மீட்டிங்க்ல. நானும், என் நண்பன் கார்த்திக்கும் எங்க காலேஜ் காபிடேரியால, சாப்டு கிட்டு இருந்தோம். அப்போ தீடிர்னு, மினேஷ் வந்து கூட சாப்ட ஆரம்பிச்சான்.. மிநேஷும், கார்த்திக்கும் ஸ்கூல் நண்பர்கள்..
அப்போ, எனக்கு எங்கயோ இருந்து தம் அடிக்குற ஸ்மல் வந்துச்சு..

நான் : டேய் கார்த்திக், இங்க பாருடா, காலேஜ் வெளிய டி - கடைல அடிக்குற தம் வாசனை இங்க வரைக்கும் வருது??????

மினேஷ் : ஹ ஹ ஹ ஹ ஹா ஹா.... டேய், அது நான் தான்டா, இப்போ தான் வெளிய போய் தம் அடிச்சுட்டு வரேன்..

நானும்- கார்த்திக்கும்: *&^%#@@#$%, ஹ ஹ ஹா ஹா..

என்னோட பச்ச புள்ள தனத்த பாருங்க.. :-) :-)
அப்புறம் கார்த்திக், இன்ட்ரோ பண்ணி வச்சான்.... :-)

அப்புறம், டெய்லி சாயங்காலம் காலேஜ் விட்டதும், நாங்க கார்த்திக் விட்டுல தான் டாப் அடிப்போம்.. நான், மினேஷ், நந்தா, விசு, விஷ்னுச்சரன், இன்னும் நெரிய வருவாங்க.. மிநேஷும் வருவான்.. அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா நல்ல நண்பர்கள் ஆனோம்.. அப்புறம் செமஸ்டர் அடம்பிச்தும் நைட் ஸ்டடின்னு அவங்க வீட்டுக்கு போனேன்.. முதல்ல கொஞ்ச நாள் பயமா இருந்தது.. கொஞ்ச நாள்ல அவங்க வீட்ல எல்லோருக்கும் எனக்கு நல்ல பழக்கம் ஆச்சு...

மினேஷ் பயங்கர BRILLIANT and HARDWORKER. +2 chemistry பரிச்சை அப்போ, தொடர்ச்சியா படிச்சு கிட்டு இருந்தானாம்.. அவனோட, வீட்டு சுவத்துல, Bath room, Toilet சுவத்துல எல்லாம் formula எழுதி வச்சு இருப்பான்.. அது மட்டும் இல்லாம அவனுக்கு chemistry, chemical நேம்ஸ் எல்லாம் நல்லா தெரியும்.. ஏன்ன அவங்க வீட்ல வாசனை திரவியம் வியாபாரம் பண்றாங்க.. அதான் நம்ம ரோஜா பைக்குல ஒரு வாசனை வரும்ல அந்த chemical, அப்புறம் விபுதி வாசனை chemical..etc etc..

நாங்க ரெண்டு பெரும் சேர்ந்த நல்லா படிப்போம்.. நான் சொல்லி குடுத்து என்ன விட நெரிய மார்க் வாங்கிட்டனா பார்த்து கோங்களேன்..என்ன ஒன்னு, நான் Electronics And Communication, மினேஷ் Computer Science. அதுனால பிரஸ்ட் இயர் மட்டும் ஒரே சிலபஸ்.. நான் காலேஜ் நாலு வருசத்துல எங்க வீட்ல இருந்த நாட்களா எண்ணிடலாம்.. எப்போவும் மினேஷ் வீட்ல தான்.. இல்ல, ரெண்டு பெரும் வேற எங்கயாவது இருப்போம்..
எங்க வீட்ல, ஒரு நாள் கூட கேட்டது கெடையாது.. என் மேல அவளோ நம்பிக்கையா இல்ல தண்ணி தெளிச்சு விட்டங்கலானு தெரியல.. ஆனா எங்க அம்மாக்கு என் மேல கண்டிப்பா நம்பிக்கை இருந்திருக்கும்..

செகண்ட் இயர் படிக்கும் பொது மினேஷ் பைக் வாங்கிட்டான்.. நாங்க பைக்ல காலேஜ் போக ஆரம்பிச்சோம்.. ஒரு வருஷம் Triples போய் கிட்டு இருந்தோம்.. நான், மினேஷ், அப்புறம் Innoru பையன் .. பைக் செம்ம ஸ்பீடா ஓட்டுவான்.. அடிக்கடி புலி குட்டிய எடுத்து கிட்டு கோடை கானல் போவோம்.. காலைல காலேஜ் போற மாதிரீ போயிட்டு, சாயங்காலம் திரும்பி வந்திருவோம்.. இவனுக்கு பின்னாடி உக்கார நெரிய பேர் பயபடுவாங்க.. இப்போ எல்லாம் எல்லாம் மாறி போச்சு.. பயங்கர carefulla ஓட்டுறான்..

மினேஷ் கிளாஸ் மேட்ஸ் கூட தான் நான் முக்காவாசி சுத்துவேன்.. செமஸ்டர் வரப்போ மட்டும், எங்க கிளாஸ் பசங்க கூட படிப்பேன்..
எங்கள TWIN BROTHERS நு நெரிய பேர் நெனச்சு இருகாங்க.. ஒரு சமயம், நான் அவங்க வீட்ல போய் சிஸ்டம்ல வொர்க்(கேம் தான்... :-))பண்ணி கிட்டு இருந்தேன்.. தீடிர்னு அவங்க சித்தப்பா வந்து, என்னப்பா மினேஷ் என்ன பண்ற? நு கேட்டார் ... திரும்புனதும், தான் தெரிஞ்சது அது மினேஷ் இல்ல பலானு.. அப்பிடி ஒரே உயரம், ஒரே எடை...அது போக அவங்க வீட்டு மாடில நெரிய சேட்டை பண்ணி இருக்கோம்..


நண்பர்களுக்காக என்ன வேணாம் பண்ணுவான்.. எனக்காக சில முறை பைக்ல டைவ் எல்லாம் அடிச்சு இருக்கான்..
1. ஒரு முறை இல்ல நண்பர்களும், ஐயப்பனுக்கு போகலாம்னு மலை போட்டு கிட்டு இருந்தோம்.. சரி, அழகர் கோவில் போயிட்டு வரலாம்னு, கெளம்பினோம்.. சனவரி 1 ந்தேதி 2002/3, கோவிலுக்கு போயிட்டு வர்ற வழில நானும், என்னொரு பையனும் scooterla வந்துகிட்டு இருந்தோம், மிநேஷும், நந்தாவும் ஒரு பைக்ல வந்தாங்க.. நான் பின்னாடி திரும்பிகிட்டு போடோ எடுத்து கிட்டு வந்து கிட்டு இருந்தேன்.. என்னோட பைக் ஓட்டுன பையன், நேர போய் ஒரு சைக்கிள் காரண இடிச்சு நாங்க, கேள விழுந்தோம்.. பின்னாடி வந்து கிட்டு இருந்த மினேஷ், டேய் பாலா விளுந்துடாண்டனு, ஒரு சடன் பிரேக் அடிக்க, பைக் அப்பிடியே ஸ்கிட் ஆய்.. ரொம்ப தூரம் சறுக்கி கிட்டே மினேஷ் விழ... நந்தா அவனுக்கு மேல டைவ் அடிக்க.. சுச்ச்ஸ்.. பாவம் !!!! ஆனா விழுந்து எழுந்து எல்லாரும் சிரிச்சு கிட்டே தான் வீட்டுக்கு போனோம்..

2. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி, கொஞ்ச ஓவரா ஸ்காட்ச் அடிச்சு, ஒரு வேகத்துல நான் என்னோட பைக் செம்ம ஸ்பீடா ootikittu choolaimedula இருந்து எங்க ரூம் அண்ணா நகர்க்கு வந்தேன்.. நான் பைக் எடுக்குற ஸ்பீடா பார்த்து, மெதுவா போ, மெதுவா போடான்னு கத்தி கிட்டே வந்தான்.. கரெக்டா நான் ஒரு டர்நிங்க்ள திரும்பிட்டேன்.. கத்தி கிட்டே வந்த மினேஷ் கவுந்துடான்.. பாவம் கை கால் எல்லாம் ஒரே சிரிப்பு.. ச்சே... ச்சே.. சிரைப்பு..

ஹ்ம்ம்ம்ம்... ஆனா என்ன ஒரு சில விசயத்துல எனக்கும், மிநேஷ்கும் ஒத்து போகாது.. 1. பொண்ணுங்க.. 2. பொண்ணுங்க.. 3. பொண்ணுங்க..
அவன் பேச மாட்டன், நான் பேசுவேன்.. அதுவும் கடலை போடுறது, கூட சும்மா ஊர் சுத்துறது, flirting பண்றது அவனுக்கு புடிக்காது.. எனக்கு புடிக்கும்.. எங்க தான் நாங்க ரெண்டு பெரும் North And South.
அதுனால நான் பொண்ணுங்க கிட்ட பேசுறத இவன் கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டேன்.. இது அப்போ அப்போ எங்க நடுவுல இடைவெளி உண்டு பண்ணும்..

மிநேஷ்கு, நிறைய பட்ட பெயர் எல்லாம் இருக்கு..
பப்ஸ் - அடிக்கடி பப்ஸ், pakkoda சாப்பிடுவான்..
தேன் முனியா - தேன் மிட்டாய் நிறைய சாப்பிடுவான்..
டெல்லி கணேஷ் - அந்த மாதிரீ இருப்பான் + அக்சன் ஒற்றுமை
மெண்டல் மினேஷ் - எதாவது லூசு தனமா பண்ணுவான்..

ஹ்ம்ம்.. இன்னைக்கு இது போதும்.. இன்னும் நெறைய இருக்கு..
அப்புறம் எழுதலாம்..

No comments: