Tuesday, July 21, 2009

வலி - புற்று நோய் என்னும் கொடியவன்..

"இன்னைக்கு செத்த நாளைக்கு பாலு"..
"நான் உனக்காக இப்போவே செத்து போறேன்"..
"நாலு ஊசுற எடுக்காம விட மாட்டேன்"..
இந்த டயலாக் எல்லாம் படத்துல கேக்கும் பொது ஒன்னும் தெரியாது..

ஆனா, உங்களால வெறும் 8 வாரம்ல இருந்து 16 வாரம் வரைக்கும் தான் இந்த வாழ்க்கை வாழ முடியும்னு தெரிஞ்சாலே ரொம்ப கஷ்டம்..
அதுவும் இந்த நாட்கள்ல கை கால் அசைக்க முடியாம இருந்தா.. தனக்கும் கஷ்டம், சுத்தி இருப்பவர்களுக்கும் கஷ்டம்... அது போக..
தன்னோட மனைவி, குழந்தை இவர்களோட எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை வேற ஒரு பக்கம் கொன்னு கிட்டு இருக்கும்..
ஆம்... கான்செர் வந்த இது எல்லாம் நடக்கும்..
நமக்கு தெரிஞ்ச வரைக்கும், காங்செர்ன அது தம் அடிச்சா வரும், தண்ணி அடிச்சா வரும்.. ஒண்ணுமே பண்ணாம எப்பிடி கான்செர் வரும்... ஒண்ணுமே பண்ணாம நல்லது பண்ண கூட கான்செர் வர வாய்ப்பு இருக்கு..

உங்களால எவ்வளவு வலிய பொறுத்துக்க முடியும்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு..ஆனா கான்செர் என்ற நோய் கொடுக்கும் வலிய நேர்ல பார்த்தும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..எனக்கு தெரிஞ்ச ஒரு சொந்தகாரர்க்கு இப்போ கான்செர் வந்து படுத்த படுக்கை ஆய்டார்..இத்தனைக்கும் அவர்க்கு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது.. ஒரு சிகரட், தண்ணி, அடிக்க மாட்டார்.. ஒரு வெத்திலை பாக்கு கூட போட மாட்டார்..

அவருக்கு Hepatitis B வைரஸ்(HBV) தாக்கியதால Liver Cancer வந்து இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.. இந்த virus தாக்கினா hepatocellular carcinoma (HCC)/liver கன்செரா டேவேலோப் ஆக சாத்தியங்கள் நெரிய இருக்காம்..
அதுவும் பதிக்க பட்ட வுடனே எல்லாம் தெரியாது.. பாதிக்க பட்டவர் நல்ல நலமோடு இருக்குற மாதிரீ தான் இருக்குமாம்.. கொஞ்சம் கொஞ்சமா நம்ம liverல கான்செர் பெருசாகி, அடி வயுறு வலி, எடை குறைதல்(80kg to 40kg), சாப்ட முடியாமல் போதல், தீவிர மஞ்சள் கமலை நோய்.. இவ்வாறு நெரிய பிரச்சனை வருமாம்..

இந்த HBV பரவ முக்கிய காரணம், ரத்தம், மற்றும் ரத சம்மந்த பட்ட ஊசிகள்.. அதாவது HBV உள்ள ஒருவர்க்கு யூஸ் பண்ண சுத்திகரிக்க படாத ஊசி, மற்றும் சிகிச்சை பொருட்களை மற்றவர்க்கு யூஸ் பண்ணின பரவும்.. இந்த மாதிரீ தான் இவர்க்கும் வந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.. இல்லை என்றால், அம்மாவிடன் இருந்து குழந்தைக்கு பரவும்.. சோ இவர்க்கு இதற்கு முன் செய்த ஆபரேஷன் மூலமாகவோ அல்லது, இவர் செய்த ரத்த தானம் மூலமாகவோ வந்திருக்கலாம் என்று யூகிக்கலாம்..

"hepatitis B cancer" என்று google செய்தால் பல இணையதள முகவரிகள் கொட்டுகின்றன.. அதில் இந்த கான்செர் வர காரணம், அடிப்படை சிகிச்சைகள், கண்டுபிடிக்கும் முறைகள் விளக்க பட்டு உள்ளன.. அதில் சில..

http://www.hepb.org/professionals/hepb_and_liver_cancer.htm

http://en.wikipedia.org/wiki/Hepatitis_B

http://www.cumc.columbia.edu/dept/gi/hepB.html

http://liver.stanford.edu/Education/hepbpatients.html

இப்போ நான் ஏன் இது எல்லாம் டைப் பண்றேன்னு தெரியல..
ஆனா.. இப்போ அவரோட இழப்பு தவிக்க முடியாத ஒன்று..
ஒரு நல்லவரா ஒரு குடும்பம் இழக்க போகுது..
அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..
அவர்க்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நல்ல மன தைரியமும், ஒரு பேர் இழப்பை சமாளிக்கும் தெம்பும் ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா கண்டிப்பா கொடுக்கணும்..

2 comments:

Unknown said...

eppadiyum cancer varadhan poguthu.. athanala naama dhum adichittu apram cancer vagikkalam

Shakthi said...

eppadiyum cancer varadhan poguthu.. athanala naama dhum adichittu apram cancer vagikkalam