Thursday, February 12, 2009

காதல்னா சும்மா இல்லடா...

இந்த போஸ்டுக்கும், காதலர் தினத்திற்கும் சம்மந்தமே இல்ல.. இது நான் ரொம்ப நாலா, என் நண்பன் லைப்ல நடக்குற லவ் பத்தி, நான் பீல் பண்றத எழுதுறேன்..

காதல காதலிக்கிற பொண்ணு கிட்ட தவிர எல்லார் கிட்டேயும் இஸியா சொல்லிட முடியும்னு, ஆனா காதலிக்குற பொண்ணு கிட்ட மட்டும் சொல்றது கஷ்டம்னு எல்லாரும் சொல்லும் பொது நம்புற மாதிரீ இல்ல..
இப்போ தான் நம்ம நண்பன், லைப்ல நேர்ல பார்த்து உணர்ந்து கிட்டு இருக்கேன்..

ஒரு பொண்ண லவ் பண்ற விசயத்த சொல்றதுக்கு சுமாரா எத்தன நாள் ஆகும்?
ஒரு ஒரு வாரம் பின்னாடி சுத்துறது.. அப்புறம் ஒரு ஒரு வாரம் பேச ட்ரை பண்றது.. கடைசியா ஒரு நல்ல நாலா பார்த்து லவ் லெத்தெரோ, இல்ல நேர்லயோ லவ் ப்ரொபோஸ் பண்றது.. இப்பிடி யோசிச்சு பார்த்தா ரொம்ப இஸியா இருக்குல.. சோ நம்ம ப்ராஜெக்ட் கணக்கு படி பார்த்தா அதிகபட்சம் ஒரு மாதம் தான்.. என் நண்பன் லைப்ல இந்த ப்ராஜெக்ட் செடியுல் ஸ்லிப் கிட்ட தட்ட 11900%... ஹா ஹா ஹா.. என்ன கணக்குனு ரொம்ப யோசிகதீங்க..

காதல சொல்றதுக்கு கிட்ட தட்ட 10 வருசமா ட்ரை பண்ணி கிட்டு இருக்கான்.. இன்னும் சரியா சொல்லி முடிக்கல..

இவன் முதல்ல அவள பார்த்தது, மும்பைல இருந்து, மதுரைக்கு வந்து ஸ்கூல்ல +1 சேர்ந்த போது.. அப்போவே நீட்ட சுடிதார் போட்டு, பூ வச்சு, போட்டு வச்சு வந்த ரொம்ப சுமாரான பிகுறே பிடிச்சு போச்சு.. ஏன்ன மும்பைல வெறும் மாடேர்ன் பிகுர் பார்த்துட்டு, கொஞ்சம் ஹோம்லியா, அடக்கமா மதுரை பொண்ண பார்த்ததும் புடிச்சதுன்னு சொன்னான்.. ஹ்ம்ம்.. இக்கரைக்கு அக்கறை பச்சனு சும்மாவா சொன்னாங்க.. அப்போ இருந்து இன்னும் அவகிட்ட பேசி, ப்ரொபோஸ் பண்ணி, லவ் பண்ணி,.. சுச்ச்ச்ச்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல.. எல்லாமே இது வரைக்கும் கனவுல மட்டும் தான்..

இவனோட அப்ப்ரோச் சரி இல்லையா, இல்ல இவன் நேரமா தெரியல, நண்பனுக்கும் அந்த பொன்னுக்கும் எப்போவுமே ஏழாம் பொருத்தம் தான்.. செரின்னு, நம்ம அனலிசிஸ் பண்ணி பார்த்த சில விஷயம் தப்பாகவோ, அல்லது சூழ்நிலை காரணமாகவோ, சரியா EXECUTE ஆகல..

ஒன்னு, ரெண்டு பேரும் இதுவரைக்கும் சரியா பேசுனது இல்ல.. அதாவது நேருக்கு நேரோ, போன்லயோ ஒரு அறை மணி நேரம் கூட பேசினது இல்ல..

ரெண்டு, இவன் இப்போ ஒரு சில வார்த்தை வழி மறிச்சு பேசுனாலும்.. படையப்பா ரஜினி மாதிரீ தான் இருக்கும்.. தா.. தா.. பீ.. ப.. பா.. இவன் ஆரம்பிக்கும் முன்னாடி அவ கெளம்பி போய் இருப்பா...

மூணு, அவ வீட்டுக்கு முன்னாடி இருக்குற கடைல போய் டிபென் சாப்டா, அவ நாமலா பார்ப்பா.. அப்பிடியே பிக் அப் பண்ணலாம்னு ட்ரை பண்றது.. இந்த அப்ப்ரோச் நால, நாங்க நல்ல சாப்டோம்.. அப்புறம் அந்த கடைகாரனுக்கு நல்ல லாபம்..

நாலு, அவளும் எங்க காலேஜ் தான், அவ இருக்குற கிளாஸ் பக்கம் போய் நிக்குறது.. அதுவும் கூட்டமா.. அவ போற வரப்போ எல்லாம் ஓவர் ரிஆக்ட் பண்றது..

இப்பிடி எல்லாமே தப்பாவே நடந்து காலேஜ் லைப் முடிஞ்சு போச்சு..

இப்போ எந்த லூசு பயனுக்கு வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடாங்க..
இப்போ தான் இவனுக்கு லாஸ்ட் அண்ட் பைனல் சான்ஸ்..

சோ.. இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சு.. பல முறை G-Talkla டிஸ்குஸ்ஸ் பண்ணினா, கடைசியா ஒரு முறை போன் பண்ணலாம்னு முடிவு.

இப்போ கூட போன் பண்ணி, அவ கிட்ட ரெண்டு மொக்கை ஜோக் சொல்லி.. அப்புறம் ஒரு மாசம் சும்மா கடலை போட்டு.. இந்த கேப்ப்ல அவன், அவள லவ் பண்ண காமெடி கதை எல்லாம் சொன்னா அவ நிச்சயமா ஒத்துகுவனு நான் நெனச்சு இருக்கேன்.. பார்ப்போம்.. என்ன நடக்க போகுதுன்னு..

மனைவி அமைவதேல்லாம் இறைவன் கொடுத்த வாரம்னா..
காதலி அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியமோ...

I wish all the very Best for my Dear Friend!!!