Tuesday, July 21, 2009

வலி - புற்று நோய் என்னும் கொடியவன்..

"இன்னைக்கு செத்த நாளைக்கு பாலு"..
"நான் உனக்காக இப்போவே செத்து போறேன்"..
"நாலு ஊசுற எடுக்காம விட மாட்டேன்"..
இந்த டயலாக் எல்லாம் படத்துல கேக்கும் பொது ஒன்னும் தெரியாது..

ஆனா, உங்களால வெறும் 8 வாரம்ல இருந்து 16 வாரம் வரைக்கும் தான் இந்த வாழ்க்கை வாழ முடியும்னு தெரிஞ்சாலே ரொம்ப கஷ்டம்..
அதுவும் இந்த நாட்கள்ல கை கால் அசைக்க முடியாம இருந்தா.. தனக்கும் கஷ்டம், சுத்தி இருப்பவர்களுக்கும் கஷ்டம்... அது போக..
தன்னோட மனைவி, குழந்தை இவர்களோட எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை வேற ஒரு பக்கம் கொன்னு கிட்டு இருக்கும்..
ஆம்... கான்செர் வந்த இது எல்லாம் நடக்கும்..
நமக்கு தெரிஞ்ச வரைக்கும், காங்செர்ன அது தம் அடிச்சா வரும், தண்ணி அடிச்சா வரும்.. ஒண்ணுமே பண்ணாம எப்பிடி கான்செர் வரும்... ஒண்ணுமே பண்ணாம நல்லது பண்ண கூட கான்செர் வர வாய்ப்பு இருக்கு..

உங்களால எவ்வளவு வலிய பொறுத்துக்க முடியும்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு..ஆனா கான்செர் என்ற நோய் கொடுக்கும் வலிய நேர்ல பார்த்தும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..எனக்கு தெரிஞ்ச ஒரு சொந்தகாரர்க்கு இப்போ கான்செர் வந்து படுத்த படுக்கை ஆய்டார்..இத்தனைக்கும் அவர்க்கு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது.. ஒரு சிகரட், தண்ணி, அடிக்க மாட்டார்.. ஒரு வெத்திலை பாக்கு கூட போட மாட்டார்..

அவருக்கு Hepatitis B வைரஸ்(HBV) தாக்கியதால Liver Cancer வந்து இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.. இந்த virus தாக்கினா hepatocellular carcinoma (HCC)/liver கன்செரா டேவேலோப் ஆக சாத்தியங்கள் நெரிய இருக்காம்..
அதுவும் பதிக்க பட்ட வுடனே எல்லாம் தெரியாது.. பாதிக்க பட்டவர் நல்ல நலமோடு இருக்குற மாதிரீ தான் இருக்குமாம்.. கொஞ்சம் கொஞ்சமா நம்ம liverல கான்செர் பெருசாகி, அடி வயுறு வலி, எடை குறைதல்(80kg to 40kg), சாப்ட முடியாமல் போதல், தீவிர மஞ்சள் கமலை நோய்.. இவ்வாறு நெரிய பிரச்சனை வருமாம்..

இந்த HBV பரவ முக்கிய காரணம், ரத்தம், மற்றும் ரத சம்மந்த பட்ட ஊசிகள்.. அதாவது HBV உள்ள ஒருவர்க்கு யூஸ் பண்ண சுத்திகரிக்க படாத ஊசி, மற்றும் சிகிச்சை பொருட்களை மற்றவர்க்கு யூஸ் பண்ணின பரவும்.. இந்த மாதிரீ தான் இவர்க்கும் வந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.. இல்லை என்றால், அம்மாவிடன் இருந்து குழந்தைக்கு பரவும்.. சோ இவர்க்கு இதற்கு முன் செய்த ஆபரேஷன் மூலமாகவோ அல்லது, இவர் செய்த ரத்த தானம் மூலமாகவோ வந்திருக்கலாம் என்று யூகிக்கலாம்..

"hepatitis B cancer" என்று google செய்தால் பல இணையதள முகவரிகள் கொட்டுகின்றன.. அதில் இந்த கான்செர் வர காரணம், அடிப்படை சிகிச்சைகள், கண்டுபிடிக்கும் முறைகள் விளக்க பட்டு உள்ளன.. அதில் சில..

http://www.hepb.org/professionals/hepb_and_liver_cancer.htm

http://en.wikipedia.org/wiki/Hepatitis_B

http://www.cumc.columbia.edu/dept/gi/hepB.html

http://liver.stanford.edu/Education/hepbpatients.html

இப்போ நான் ஏன் இது எல்லாம் டைப் பண்றேன்னு தெரியல..
ஆனா.. இப்போ அவரோட இழப்பு தவிக்க முடியாத ஒன்று..
ஒரு நல்லவரா ஒரு குடும்பம் இழக்க போகுது..
அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..
அவர்க்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நல்ல மன தைரியமும், ஒரு பேர் இழப்பை சமாளிக்கும் தெம்பும் ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா கண்டிப்பா கொடுக்கணும்..

Wednesday, June 17, 2009

Pursuit of happiness!!!

ஸ்டார்ட் ஆப் தி ஸ்டோரி

"என்னத்த சொல்றது.. கஷ்டம் எப்போவும் நமக்கு மட்டும் தான் வரும்" என்று நொந்து கொண்டான் காரத்திக்.

"என்னடா என்றன் பிரச்சனை, நல்ல தானே பொய் கிட்டு இருக்கு.. நீ தான் எப்போவும் சிரிச்சு கிட்டே இருக்கே.. அப்புறம் என்ன திடிர்னு.." என்றான் நண்பன் பாலா.

"டேய் ஒண்ணுமே, சரியா இல்லடா.. வீட்ல எதுவும் சரியா நடக்காத மாதிரீ ஒரு பீலிங்.. ஒரு வேலை நான் ஊர்ல இருந்த சரி பண்ண முடியுமான்னு, யோசிக்கிறேன்." என்று ஒரு வருத்தத்துடன் சொன்னான்.

"நீயாட இப்பிடி எல்லாம் பேசுறது.. ஒரே ஆச்சர்யமா இருக்கு.. என்னதான் கஷ்டமா இருந்தாலும் அசால்டா இருப்ப.. இப்போ என்ன ஆச்சு.." என்றான் பாலா.

Something is missing/messing in my life - It is all about Happiness

"சில விசயங்கள் எங்க வீட்ல இருந்துச்சு.. அது இப்போ இல்ல.." "Something was motivating us to fight with anything.. Now we are missing something man".. என்றான் கார்த்திக் ஒரு கோவம் கலந்த வருத்தத்துடன்..

"என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனை.. இவன் என்ன சொல்ல வரான்னு ஒண்ணுமே புரியலையே.. ஒரு வேலை லவு, கிவு எதாவது பண்ணி லூஸ் ஆயடானோ.." என்று மனசுக்குள் என்ன செய்வதுன்னு தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான் பாலா.

SELF CONFIDENCE

"நம்ம லைப் மோடிவேட் பண்ற விஷயங்கள் ஒரு சிலது இருக்கு.. அதுல ஒண்ணு
SELF CONFIDENCE - தன்நம்பிக்கை" என்றான் கார்த்திக் சற்று அழுத்தமாக!!

"வீட்ல அம்மா ரொம்ப தைரியமா இருந்தாங்க, எப்போவும் பாசிடிவா திங்க் பண்ணுவாங்க.. எப்போவும் நல்லதே நடக்கும்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.. என்னால என் பசங்கள எல்லாம் நல்ல படியா கொண்டு வர முடியும்னு ஒரு தன் நம்பிக்கை இருந்துச்சு.. Yes. With that confidence she made us!! ரொம்ப ஹர்ட்வோர்க் பண்ணி, எங்கள படிக்க வச்சு, கஷ்ட பட்டப்போ, இருந்த அவங்க தன்நம்பிக்கை , இப்போ ரொம்ப குறைஞ்ச மாதிரீ இருக்கு.. தான் எடுத்த சில முடிவுகள் தப்பா போச்சுன்னு, ரொம்ப வருத்த பட்டுகிட்டு இருகாங்க.. "

"Its looks like Mom lost self-confidence" என்றான் கார்த்திக்.

"ஹ்ம்ம்.." என்று தன் பார்வை வழியாக, அவனை தட்டி கொடுத்தான் பாலா..


COURAGE

"அடுத்து ரொம்ப முக்கியமான விஷயம், "COURAGE" - மன தைரியம் - துணிவு."- இன்னமும் கார்த்திக் முகத்தில ஒரு இருக்கம் இருந்தது..

ரொம்ப மன தைரியத்தோட இருந்த என் அக்கா, இப்போ சுத்தமா தைரியம் இல்லமா இருக்கா..
சின்ன புள்ளையா படிக்கும் போதே, அம்மாக்கு ஹெல்ப் பண்ண ட்யூசன் எடுக்க ஆரம்பிச்சுட்டா.. எங்க எல்லாருக்கும் ரோல் மாடல்னு சொல்லணும்.. ரொம்ப fast and quick.. எத்தனை பேர் வந்தாலும் தன்னோட பாயிண்ட் சரியா இருந்த தைரியமா நின்னு பேசுவா இல்ல இல்ல சண்டையே போடுவா......

இப்போ சுத்தமா அந்த Courage இல்ல.. அவங்க முகத்துல இருந்த தைரியம் எல்லாம் போன மாதிரீ தெரியுது.. சோ திஸ் இஸ் செகண்ட் திங் தட் பாதர்ஸ் மீ அலாட் ...

"டேய் உன்ன விட வீட்ல எல்லாரும் நல்ல இருக்குற மாதிரீ தான் தெரியுது.. நீ சும்மா போட்டு டென்சன் ஆகாதே" என்று சமாதான படுத்தினான் பாலா...

"இல்லடா நாங்க கஷ்ட பட்டுகிட்டு இருந்தப்போ சந்தோசமா இருந்தோம்.. நாங்க சின்ன வயசுல இருந்த சந்தோசம் எல்லாம் இப்போ இல்ல..இப்போ எதுவுமே இல்ல".. கார்த்திக்

Trust

"எதையுமே நல்லா யோசிச்சு முடிவு எடுக்குற என்னோட சின்ன அக்கா கூட இப்போ கொஞ்சம் டல்லா தான் இருக்கா.. அவளுக்கு ஹெவன் மேல இருந்த நம்பிக்கை கொறஞ்சு போச்சு.. அப்பா, அம்மா தனக்கு சப்போர்ட் பண்ணலைனு நெனச்சுகிட்டு இருக்கா..
So, If someone looses the trust on you.. Then whatever the relationship.. It is gonna get break-up or always some contradiction will be there!! This is what happening in my heaven man!!
இந்த மாதிரீ நெறைய பிரச்சனை வந்து, அப்பாக்கு BP ஏறுனது தான் மிச்சம்.. அவர் தன்னால எதுவும் பண்ண முடியலேன்னு நொந்து போய்ட்டார்..."மூச்சு விடாமல் பேசி முடித்தான் கார்த்திக்.

டேய் "cool down man.. Think about solution" என்றான் பாலா

End of Story:

"நான் தான் எதாவது பண்ணி, எல்லாத்தையும் திரும்ப கொண்டு வரணும்..
அத தான் நான் கொஞ்ச நாலா யோசிச்சு கிட்டு இருக்கேன்..
எப்பிடி எல்லாத்தையும் சரி பண்றது.. இல்ல நடக்குது நடக்கும்னு சொல்லி பொய் கிட்டே இருக்கலாமா..

சில சமயம் எனக்கு தோன்ற ஐடியா எல்லாம் சின்ன புள்ள தனமா இருக்கு..
இப்பிடி தான், ஒரு நாள் ஊர்ல இருந்து பஸ்ல வரும் போது புல்லா தூங்கவே இல்ல.. நெரிய தோணிகிட்டே இருந்துச்சு.. அதுல ஒரு சில ஐடியா..

ஐடியா 1:
நம்ம அக்காவோட, தைரியம், துணிவு எல்லாம் திரும்பி கொண்டு வர, ஒரு ஸ்கேல் வாங்கி அதுல, இப்பிடி எழுதின என்ன?

"You Born To Rule People"
"You Born Brave and Help Others"
"You Are Strong and Courage"
"Don't Let go your courage, Bring back happiness to the world"

அவங்க காலேஜ் Lecturer, சோ ஸ்கேல் இஸ் தி பெஸ்ட் ஒன்!!!! ஹா ஹா ஹா..
கார்த்திக் முகத்தில் ஒரு மகிழ்ச்சி..நண்பனோ சின்னதாக சிரித்தான்.

ஐடியா 2:

இது கொஞ்சம் complicated.. ஏன்ன ஒரு தடவ Trust/நம்பிக்கை போச்சுனா திரும்ப கொண்டு வரது கஷ்டம்.. ஸ்டில், பேசுன கொஞ்சம் சரி பண்ணலாம்..எப்பிடி பாத்தாலும், பேசாம , இல்ல நம்ம ப்ரோப்லமா எக்ஸ்ப்ளைன் பண்ணாம ஒண்ணும் பண்ண முடியாது.. ஒரு வேல இத படிச்சா அவ புரிஞ்சுக்கலாம்..

ஐடியா 3:

அம்மா & அப்பா, இட் இஸ் சோ ஈஸி... அப்பா, அம்மாக்கு தன்னோட புள்ளங்க நல்ல இருந்த போதும்.. அதுவே அவங்கள சரி பண்ணிடும்..

SO IT IS ALL VERY EASY TO FIX!! THINK POSITIVE!!என்றான் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன்.....


Wednesday, March 18, 2009

நண்பன் - மினேஷ்

மினேஷ் பத்தி சொல்லனும்னா, நெறைய சொல்லலாம். நாங்க ரெண்டு பெரும் பைக்ல டிரைவ் பண்ணி கிட்டே பேச ஆரம்பிச்சா, ஒரே காமெடிய இருக்கும். எதாவது பண்ணி கிட்டே இருப்பான். ரெண்டு நிமிஷம் சும்மா இருக்க முடியாது. ரெண்டு, மூனு, நிமிஷத்துல வெடிகுற மாதிரீ ஒரு டைம் பாம் கட்டி விட்டா, நீங்க எப்பிடி, என்ன பண்ணுவீங்க? அப்பிடி துரு துறுன்னு இருப்பான். என்னோட நண்பர்கள்ல முக்கியமானவன்.

நாங்க நண்பர்கள் ஆனதே, ஒரு காமெடி மீட்டிங்க்ல. நானும், என் நண்பன் கார்த்திக்கும் எங்க காலேஜ் காபிடேரியால, சாப்டு கிட்டு இருந்தோம். அப்போ தீடிர்னு, மினேஷ் வந்து கூட சாப்ட ஆரம்பிச்சான்.. மிநேஷும், கார்த்திக்கும் ஸ்கூல் நண்பர்கள்..
அப்போ, எனக்கு எங்கயோ இருந்து தம் அடிக்குற ஸ்மல் வந்துச்சு..

நான் : டேய் கார்த்திக், இங்க பாருடா, காலேஜ் வெளிய டி - கடைல அடிக்குற தம் வாசனை இங்க வரைக்கும் வருது??????

மினேஷ் : ஹ ஹ ஹ ஹ ஹா ஹா.... டேய், அது நான் தான்டா, இப்போ தான் வெளிய போய் தம் அடிச்சுட்டு வரேன்..

நானும்- கார்த்திக்கும்: *&^%#@@#$%, ஹ ஹ ஹா ஹா..

என்னோட பச்ச புள்ள தனத்த பாருங்க.. :-) :-)
அப்புறம் கார்த்திக், இன்ட்ரோ பண்ணி வச்சான்.... :-)

அப்புறம், டெய்லி சாயங்காலம் காலேஜ் விட்டதும், நாங்க கார்த்திக் விட்டுல தான் டாப் அடிப்போம்.. நான், மினேஷ், நந்தா, விசு, விஷ்னுச்சரன், இன்னும் நெரிய வருவாங்க.. மிநேஷும் வருவான்.. அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா நல்ல நண்பர்கள் ஆனோம்.. அப்புறம் செமஸ்டர் அடம்பிச்தும் நைட் ஸ்டடின்னு அவங்க வீட்டுக்கு போனேன்.. முதல்ல கொஞ்ச நாள் பயமா இருந்தது.. கொஞ்ச நாள்ல அவங்க வீட்ல எல்லோருக்கும் எனக்கு நல்ல பழக்கம் ஆச்சு...

மினேஷ் பயங்கர BRILLIANT and HARDWORKER. +2 chemistry பரிச்சை அப்போ, தொடர்ச்சியா படிச்சு கிட்டு இருந்தானாம்.. அவனோட, வீட்டு சுவத்துல, Bath room, Toilet சுவத்துல எல்லாம் formula எழுதி வச்சு இருப்பான்.. அது மட்டும் இல்லாம அவனுக்கு chemistry, chemical நேம்ஸ் எல்லாம் நல்லா தெரியும்.. ஏன்ன அவங்க வீட்ல வாசனை திரவியம் வியாபாரம் பண்றாங்க.. அதான் நம்ம ரோஜா பைக்குல ஒரு வாசனை வரும்ல அந்த chemical, அப்புறம் விபுதி வாசனை chemical..etc etc..

நாங்க ரெண்டு பெரும் சேர்ந்த நல்லா படிப்போம்.. நான் சொல்லி குடுத்து என்ன விட நெரிய மார்க் வாங்கிட்டனா பார்த்து கோங்களேன்..என்ன ஒன்னு, நான் Electronics And Communication, மினேஷ் Computer Science. அதுனால பிரஸ்ட் இயர் மட்டும் ஒரே சிலபஸ்.. நான் காலேஜ் நாலு வருசத்துல எங்க வீட்ல இருந்த நாட்களா எண்ணிடலாம்.. எப்போவும் மினேஷ் வீட்ல தான்.. இல்ல, ரெண்டு பெரும் வேற எங்கயாவது இருப்போம்..
எங்க வீட்ல, ஒரு நாள் கூட கேட்டது கெடையாது.. என் மேல அவளோ நம்பிக்கையா இல்ல தண்ணி தெளிச்சு விட்டங்கலானு தெரியல.. ஆனா எங்க அம்மாக்கு என் மேல கண்டிப்பா நம்பிக்கை இருந்திருக்கும்..

செகண்ட் இயர் படிக்கும் பொது மினேஷ் பைக் வாங்கிட்டான்.. நாங்க பைக்ல காலேஜ் போக ஆரம்பிச்சோம்.. ஒரு வருஷம் Triples போய் கிட்டு இருந்தோம்.. நான், மினேஷ், அப்புறம் Innoru பையன் .. பைக் செம்ம ஸ்பீடா ஓட்டுவான்.. அடிக்கடி புலி குட்டிய எடுத்து கிட்டு கோடை கானல் போவோம்.. காலைல காலேஜ் போற மாதிரீ போயிட்டு, சாயங்காலம் திரும்பி வந்திருவோம்.. இவனுக்கு பின்னாடி உக்கார நெரிய பேர் பயபடுவாங்க.. இப்போ எல்லாம் எல்லாம் மாறி போச்சு.. பயங்கர carefulla ஓட்டுறான்..

மினேஷ் கிளாஸ் மேட்ஸ் கூட தான் நான் முக்காவாசி சுத்துவேன்.. செமஸ்டர் வரப்போ மட்டும், எங்க கிளாஸ் பசங்க கூட படிப்பேன்..
எங்கள TWIN BROTHERS நு நெரிய பேர் நெனச்சு இருகாங்க.. ஒரு சமயம், நான் அவங்க வீட்ல போய் சிஸ்டம்ல வொர்க்(கேம் தான்... :-))பண்ணி கிட்டு இருந்தேன்.. தீடிர்னு அவங்க சித்தப்பா வந்து, என்னப்பா மினேஷ் என்ன பண்ற? நு கேட்டார் ... திரும்புனதும், தான் தெரிஞ்சது அது மினேஷ் இல்ல பலானு.. அப்பிடி ஒரே உயரம், ஒரே எடை...அது போக அவங்க வீட்டு மாடில நெரிய சேட்டை பண்ணி இருக்கோம்..


நண்பர்களுக்காக என்ன வேணாம் பண்ணுவான்.. எனக்காக சில முறை பைக்ல டைவ் எல்லாம் அடிச்சு இருக்கான்..
1. ஒரு முறை இல்ல நண்பர்களும், ஐயப்பனுக்கு போகலாம்னு மலை போட்டு கிட்டு இருந்தோம்.. சரி, அழகர் கோவில் போயிட்டு வரலாம்னு, கெளம்பினோம்.. சனவரி 1 ந்தேதி 2002/3, கோவிலுக்கு போயிட்டு வர்ற வழில நானும், என்னொரு பையனும் scooterla வந்துகிட்டு இருந்தோம், மிநேஷும், நந்தாவும் ஒரு பைக்ல வந்தாங்க.. நான் பின்னாடி திரும்பிகிட்டு போடோ எடுத்து கிட்டு வந்து கிட்டு இருந்தேன்.. என்னோட பைக் ஓட்டுன பையன், நேர போய் ஒரு சைக்கிள் காரண இடிச்சு நாங்க, கேள விழுந்தோம்.. பின்னாடி வந்து கிட்டு இருந்த மினேஷ், டேய் பாலா விளுந்துடாண்டனு, ஒரு சடன் பிரேக் அடிக்க, பைக் அப்பிடியே ஸ்கிட் ஆய்.. ரொம்ப தூரம் சறுக்கி கிட்டே மினேஷ் விழ... நந்தா அவனுக்கு மேல டைவ் அடிக்க.. சுச்ச்ஸ்.. பாவம் !!!! ஆனா விழுந்து எழுந்து எல்லாரும் சிரிச்சு கிட்டே தான் வீட்டுக்கு போனோம்..

2. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி, கொஞ்ச ஓவரா ஸ்காட்ச் அடிச்சு, ஒரு வேகத்துல நான் என்னோட பைக் செம்ம ஸ்பீடா ootikittu choolaimedula இருந்து எங்க ரூம் அண்ணா நகர்க்கு வந்தேன்.. நான் பைக் எடுக்குற ஸ்பீடா பார்த்து, மெதுவா போ, மெதுவா போடான்னு கத்தி கிட்டே வந்தான்.. கரெக்டா நான் ஒரு டர்நிங்க்ள திரும்பிட்டேன்.. கத்தி கிட்டே வந்த மினேஷ் கவுந்துடான்.. பாவம் கை கால் எல்லாம் ஒரே சிரிப்பு.. ச்சே... ச்சே.. சிரைப்பு..

ஹ்ம்ம்ம்ம்... ஆனா என்ன ஒரு சில விசயத்துல எனக்கும், மிநேஷ்கும் ஒத்து போகாது.. 1. பொண்ணுங்க.. 2. பொண்ணுங்க.. 3. பொண்ணுங்க..
அவன் பேச மாட்டன், நான் பேசுவேன்.. அதுவும் கடலை போடுறது, கூட சும்மா ஊர் சுத்துறது, flirting பண்றது அவனுக்கு புடிக்காது.. எனக்கு புடிக்கும்.. எங்க தான் நாங்க ரெண்டு பெரும் North And South.
அதுனால நான் பொண்ணுங்க கிட்ட பேசுறத இவன் கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டேன்.. இது அப்போ அப்போ எங்க நடுவுல இடைவெளி உண்டு பண்ணும்..

மிநேஷ்கு, நிறைய பட்ட பெயர் எல்லாம் இருக்கு..
பப்ஸ் - அடிக்கடி பப்ஸ், pakkoda சாப்பிடுவான்..
தேன் முனியா - தேன் மிட்டாய் நிறைய சாப்பிடுவான்..
டெல்லி கணேஷ் - அந்த மாதிரீ இருப்பான் + அக்சன் ஒற்றுமை
மெண்டல் மினேஷ் - எதாவது லூசு தனமா பண்ணுவான்..

ஹ்ம்ம்.. இன்னைக்கு இது போதும்.. இன்னும் நெறைய இருக்கு..
அப்புறம் எழுதலாம்..

Thursday, February 12, 2009

காதல்னா சும்மா இல்லடா...

இந்த போஸ்டுக்கும், காதலர் தினத்திற்கும் சம்மந்தமே இல்ல.. இது நான் ரொம்ப நாலா, என் நண்பன் லைப்ல நடக்குற லவ் பத்தி, நான் பீல் பண்றத எழுதுறேன்..

காதல காதலிக்கிற பொண்ணு கிட்ட தவிர எல்லார் கிட்டேயும் இஸியா சொல்லிட முடியும்னு, ஆனா காதலிக்குற பொண்ணு கிட்ட மட்டும் சொல்றது கஷ்டம்னு எல்லாரும் சொல்லும் பொது நம்புற மாதிரீ இல்ல..
இப்போ தான் நம்ம நண்பன், லைப்ல நேர்ல பார்த்து உணர்ந்து கிட்டு இருக்கேன்..

ஒரு பொண்ண லவ் பண்ற விசயத்த சொல்றதுக்கு சுமாரா எத்தன நாள் ஆகும்?
ஒரு ஒரு வாரம் பின்னாடி சுத்துறது.. அப்புறம் ஒரு ஒரு வாரம் பேச ட்ரை பண்றது.. கடைசியா ஒரு நல்ல நாலா பார்த்து லவ் லெத்தெரோ, இல்ல நேர்லயோ லவ் ப்ரொபோஸ் பண்றது.. இப்பிடி யோசிச்சு பார்த்தா ரொம்ப இஸியா இருக்குல.. சோ நம்ம ப்ராஜெக்ட் கணக்கு படி பார்த்தா அதிகபட்சம் ஒரு மாதம் தான்.. என் நண்பன் லைப்ல இந்த ப்ராஜெக்ட் செடியுல் ஸ்லிப் கிட்ட தட்ட 11900%... ஹா ஹா ஹா.. என்ன கணக்குனு ரொம்ப யோசிகதீங்க..

காதல சொல்றதுக்கு கிட்ட தட்ட 10 வருசமா ட்ரை பண்ணி கிட்டு இருக்கான்.. இன்னும் சரியா சொல்லி முடிக்கல..

இவன் முதல்ல அவள பார்த்தது, மும்பைல இருந்து, மதுரைக்கு வந்து ஸ்கூல்ல +1 சேர்ந்த போது.. அப்போவே நீட்ட சுடிதார் போட்டு, பூ வச்சு, போட்டு வச்சு வந்த ரொம்ப சுமாரான பிகுறே பிடிச்சு போச்சு.. ஏன்ன மும்பைல வெறும் மாடேர்ன் பிகுர் பார்த்துட்டு, கொஞ்சம் ஹோம்லியா, அடக்கமா மதுரை பொண்ண பார்த்ததும் புடிச்சதுன்னு சொன்னான்.. ஹ்ம்ம்.. இக்கரைக்கு அக்கறை பச்சனு சும்மாவா சொன்னாங்க.. அப்போ இருந்து இன்னும் அவகிட்ட பேசி, ப்ரொபோஸ் பண்ணி, லவ் பண்ணி,.. சுச்ச்ச்ச்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல.. எல்லாமே இது வரைக்கும் கனவுல மட்டும் தான்..

இவனோட அப்ப்ரோச் சரி இல்லையா, இல்ல இவன் நேரமா தெரியல, நண்பனுக்கும் அந்த பொன்னுக்கும் எப்போவுமே ஏழாம் பொருத்தம் தான்.. செரின்னு, நம்ம அனலிசிஸ் பண்ணி பார்த்த சில விஷயம் தப்பாகவோ, அல்லது சூழ்நிலை காரணமாகவோ, சரியா EXECUTE ஆகல..

ஒன்னு, ரெண்டு பேரும் இதுவரைக்கும் சரியா பேசுனது இல்ல.. அதாவது நேருக்கு நேரோ, போன்லயோ ஒரு அறை மணி நேரம் கூட பேசினது இல்ல..

ரெண்டு, இவன் இப்போ ஒரு சில வார்த்தை வழி மறிச்சு பேசுனாலும்.. படையப்பா ரஜினி மாதிரீ தான் இருக்கும்.. தா.. தா.. பீ.. ப.. பா.. இவன் ஆரம்பிக்கும் முன்னாடி அவ கெளம்பி போய் இருப்பா...

மூணு, அவ வீட்டுக்கு முன்னாடி இருக்குற கடைல போய் டிபென் சாப்டா, அவ நாமலா பார்ப்பா.. அப்பிடியே பிக் அப் பண்ணலாம்னு ட்ரை பண்றது.. இந்த அப்ப்ரோச் நால, நாங்க நல்ல சாப்டோம்.. அப்புறம் அந்த கடைகாரனுக்கு நல்ல லாபம்..

நாலு, அவளும் எங்க காலேஜ் தான், அவ இருக்குற கிளாஸ் பக்கம் போய் நிக்குறது.. அதுவும் கூட்டமா.. அவ போற வரப்போ எல்லாம் ஓவர் ரிஆக்ட் பண்றது..

இப்பிடி எல்லாமே தப்பாவே நடந்து காலேஜ் லைப் முடிஞ்சு போச்சு..

இப்போ எந்த லூசு பயனுக்கு வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடாங்க..
இப்போ தான் இவனுக்கு லாஸ்ட் அண்ட் பைனல் சான்ஸ்..

சோ.. இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சு.. பல முறை G-Talkla டிஸ்குஸ்ஸ் பண்ணினா, கடைசியா ஒரு முறை போன் பண்ணலாம்னு முடிவு.

இப்போ கூட போன் பண்ணி, அவ கிட்ட ரெண்டு மொக்கை ஜோக் சொல்லி.. அப்புறம் ஒரு மாசம் சும்மா கடலை போட்டு.. இந்த கேப்ப்ல அவன், அவள லவ் பண்ண காமெடி கதை எல்லாம் சொன்னா அவ நிச்சயமா ஒத்துகுவனு நான் நெனச்சு இருக்கேன்.. பார்ப்போம்.. என்ன நடக்க போகுதுன்னு..

மனைவி அமைவதேல்லாம் இறைவன் கொடுத்த வாரம்னா..
காதலி அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியமோ...

I wish all the very Best for my Dear Friend!!!

Tuesday, January 20, 2009

நம்பிக்கை + ஹரிவராசனம்

நம்மள சின்ன வயசுல இருந்து, இப்போ வரைக்கு, புடிச்ச சாமின்னு கேட்டா, நம்ம சொல்ற பேரு அய்யப்பன் தான்.. என்னமோ தெரியல எனக்கு ஏன் புடிச்சதுன்னு தெரியல..

ஆனா யேசுதாஸ் பாடுன, ஹரிவராசனம் பாட்டு, அநேகமா எல்லாருக்கும் புடிக்கும்.. அப்பிடி ஒரு வாய்ஸ்.. எப்போ கேட்டலும் நமக்கு ஒரு நிம்மதியும், மன அமைதியும் கெடைக்குது.. இதோ அந்த பாட்டு..ஒரு சில விஷயங்கள், கேட்கும் பொது வேடிக்கையாக இருக்கும்.. ஆனா நாம், எதையும் நம்பிக்கை வைத்து செய்தால், நம்ம நெனைகுறது நடக்கும்னு நம்பிக்கை.. அப்பிடி தும்பிக்கை சாமி மேல நான் சின்ன வயசுல, அதாவது பத்தாவது படிக்கும் பொது வச்ச நம்பிக்கை ஒரு வேடிக்கையான விஷயம்..

எங்க மாமி(அத்தை) என் கிட்ட வந்து, நீ டெய்லி காலைல எழுந்து, குளிச்சி முடிச்ச வுடனேயே, நம்ம வீட்டு முக்குல இருக்குற விநாயகர, கும்பிட்டு வந்து, படிச்சா நல்ல மார்க் வாங்கலாம்னு சொன்னாங்க.. அது மட்டும் சொன்ன பரவா இல்ல..
ஒரு ஒரு தடவையும், சாமி கும்பிடும் பொது, விநாயகர்க்கு ஏதாவது காணிக்கை கண்டிப்பா போட வேண்டும்னு வேற சொல்லிடாங்க.. ஏன்ன அப்போ தான் விநாயகர் அவரோட accountல நம்ம வேண்டுதல வச்சுருவர்னு சொன்னாங்க..
ஹ ஹா ஹா.. பச்ச புள்ளைய எப்பிடி எல்லாம் ஏமாத்தி இருகாங்க...

நானும், அதுக்கு அப்புறம் டெய்லி காலைல எழுந்து குளிச்சு முடிச்சவுடனேயே, விநாயகர் கிவில் பொய் சாமி கும்பிட்டு வருவேன்.. இப்பிடியே 10th முடியுற வரைக்கும் பண்ணிட்டேன்.. நல்ல மார்க் வந்துச்சு.. எவளோ மார்க்னு சொல்லி அசிங்க பட விரும்பல..

இப்போ கூட, நான் டெய்லி 10 பைசா எடுத்து கிட்டு பொய் சாமி கும்பிட்ட நிகழ்ச்சி எல்லாம் நெனைக்கும் பொது வேடிக்கையாகவும், அதே சமயம், நான் எப்பிடி நம்பிக்கை வச்சதால, எனக்கு சில நன்மைகள் வந்துச்சு..
அந்த சில நன்மைகள்..
1. என்ன டெய்லி காலைல எழுப்ப வேண்டிய அவசியம் எல்லாம போச்சு..
2. நம்மளும் டெய்லி காணிக்கை போட்டு சாமி கும்பிட்டா, சாமி accountல வச்சு நமக்கு மார்க் போடும்னு நெனச்சு பண்ணிடோம்.. ஆட்டோ மெட்டிக்கா படிக்க ஆரம்பிச்சுட்டேன்..ஆனா படிக்காம தான சாமி மார்க் போடாது..அது வேற விஷயம்.. அது இன்னொரு காலேஜ் செமஸ்டர் அப்போ தான் தெரிஞ்சது..
3. என்ன தான் நம்ம படிச்சு நல்ல எழுதினாலும் நமக்கு ஒரு Internal நம்பிக்கை வரணும்னு சாமி கும்பிட்டாச்சு.. அதுனால தன்னம்பிக்கை வந்துச்சு...

இதுனால நான் என்ன பீல் பண்றேன்னா..
சில மூட நம்பிக்கை மூலமா, நமக்கு நன்மை இருந்தா, அந்த மூட நம்பிக்கைய நல்ல நம்பிக்கைய பண்ணலாம்..

Tuesday, January 13, 2009

பிரிவு..

தான் ஈன்ற குழந்தையை , ஒரு சில மாதத்தில்
பிரிந்த தாய் போல அல்லவா உணர்கிறேன்…. உன் பிரிவால்..

நான் எப்போதும் சிரித்து பார்த்து பழகிய நண்பர்கள்,
என் வருகைகாக காத்திருக்கும் என் அக்கா, கோமல் குட்டி,
எவ்ளவு நன்றாக சாப்பிட்டாலும், சரியா சாப்பிட மாட்டேங்கற என்னும் அம்மா ,

இவர்கள் எல்லாம் எனக்கு எப்போதும் சந்தோசத்தையே
கொடுத்து பழக்கி விட்டதாலோ என்னவோ ,
கடவுள் இப்போது சற்று வலியை கொடுக்கிறான்… உன் பிரிவால் …

தாய்மை

சில தினத்திற்கு முன் டைப்ஹைட் வந்து மூணு நாள் ட்ரிப் எத்தனும்னு டாக்டர் சொல்லிட்டார்.. டெய்லி காலை, மாலை ஆஸ்பிடல் போய் ட்ரிப் எத்தி கிட்டு இருந்தேன்..

டிசம்பர் 24 காலை ஒரு 10 மணிக்கு வழக்கம் போல ட்ரிப் எத்த போய் இருந்தேன்..
எனக்கு ரெண்டு பாட்டில் எத்தனும்.. மூணு நாலா ஒரே கைல எத்துறதால, வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. எப்பிடியோ, கஷ்டப்பட்டு போட்டு முடிச்சுடலாம்னு நான் ட்ரிப் ஏத்திகிட்டு இருந்தேன்..

எனக்கு இன்னொரு சைடுல ஒரு வயசான பாட்டி, ஒடம்பு சரி எல்லாம அட்மிட் ஆகி அவங்களும் ட்ரிப் ஏத்திகிட்டு இருந்தாங்க..

அப்போ தான், ஒரு பொண்ணோட அழு குரல்... கூடவே ரெண்டு மூணு டாக்டர், ரெண்டு நர்ஸ், ஆபரேஷன் முடிஞ்சு கூட்டி கிட்டு வந்தாங்க..
அவங்களுக்கு நான் இருந்த பெட் குடுத்துட்டு, வேற ஒரு பெட்ல போய் நான் படுத்துகிட்டேன்.. ஏன்ன அங்க ரொம்ப நெருக்கமா பெட் போட்டு இருந்தனால, அவங்க ஸ்ட்ரெச்சர் போக முடியல..

அந்த பொண்ணு லேசான முனு முனுப்பு ஓட அழுதுகிட்டே, இருந்தாங்க..
"என்ன எதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்"..
"என்ன எதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்"..
"நான் என் இங்க வாழனும்"..
"நான் செத்தா கூட பரவா இல்ல, எனக்கு குழந்தை மட்டும் பொறந்த போதும்"..
"நான் செத்தா கூட பரவா இல்ல, எனக்கு குழந்தை மட்டும் நல்ல படிய பொறந்த போதும்"..
"அம்மா நான் என்னமா பாவம் பண்ணேன் எனக்கு மட்டும் எப்பிடி ஆச்சே"...
"அம்மா நான் செத்து போறேன்மா"..."அம்மா நான் செத்து போறேன்மா"...
"இத்தோட மூணு போச்சே.. நான் என்ன பண்ணுவேன்"..
"என்ன கொன்னுடுங்க..நான் சாகுறேன்"..

இப்பிடி அவங்க அழ அழ, எனக்கே தெரியாம, கண்ணுல தண்ணி..
கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன்.. "கடவுளே!!! இவங்களுக்கு தைரியமும் நல்ல குழந்தையும் கொடு.." ஒரு ரெண்டு மூணு நாளைக்கு எனக்கு சரியா எதுவும் பண்ண முடியல.. என்ன ரொம்ப பாதிச்ச விசயங்கள இதுவும் ஒன்னு..
அப்போ தான், ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது எவ்வளவு முக்கியமான ஒண்ணுனு.. பீல் பண்ண முடிஞ்சது....

ஒரு குழந்தை பெற்றால் தான் தாய்மை என்ற தகுதி பெற முடியும்.. தாய்மை அடைந்தால் தான் பெண்மை முழுமை அடையும்.. இப்பிடி எல்லாம் bookla படிக்கும் பொது ஒன்னும் தெரியாது.. இந்த மாதிரீ யாராவது கஷ்ட படுவதை நேரில் பார்க்கும் பொது, மனசுல ஒரு வலி...

இப்போ எல்லாம், எனக்கு குழந்தை பெற போகும் பெண்ணை/தாய்மையை பார்க்கும் பொது மரியாதையும் அன்பும், அவர்களுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்னு வேண்டுதலும்.. தானாக வந்து விட்டது..