Tuesday, January 20, 2009

நம்பிக்கை + ஹரிவராசனம்

நம்மள சின்ன வயசுல இருந்து, இப்போ வரைக்கு, புடிச்ச சாமின்னு கேட்டா, நம்ம சொல்ற பேரு அய்யப்பன் தான்.. என்னமோ தெரியல எனக்கு ஏன் புடிச்சதுன்னு தெரியல..

ஆனா யேசுதாஸ் பாடுன, ஹரிவராசனம் பாட்டு, அநேகமா எல்லாருக்கும் புடிக்கும்.. அப்பிடி ஒரு வாய்ஸ்.. எப்போ கேட்டலும் நமக்கு ஒரு நிம்மதியும், மன அமைதியும் கெடைக்குது.. இதோ அந்த பாட்டு..



ஒரு சில விஷயங்கள், கேட்கும் பொது வேடிக்கையாக இருக்கும்.. ஆனா நாம், எதையும் நம்பிக்கை வைத்து செய்தால், நம்ம நெனைகுறது நடக்கும்னு நம்பிக்கை.. அப்பிடி தும்பிக்கை சாமி மேல நான் சின்ன வயசுல, அதாவது பத்தாவது படிக்கும் பொது வச்ச நம்பிக்கை ஒரு வேடிக்கையான விஷயம்..

எங்க மாமி(அத்தை) என் கிட்ட வந்து, நீ டெய்லி காலைல எழுந்து, குளிச்சி முடிச்ச வுடனேயே, நம்ம வீட்டு முக்குல இருக்குற விநாயகர, கும்பிட்டு வந்து, படிச்சா நல்ல மார்க் வாங்கலாம்னு சொன்னாங்க.. அது மட்டும் சொன்ன பரவா இல்ல..
ஒரு ஒரு தடவையும், சாமி கும்பிடும் பொது, விநாயகர்க்கு ஏதாவது காணிக்கை கண்டிப்பா போட வேண்டும்னு வேற சொல்லிடாங்க.. ஏன்ன அப்போ தான் விநாயகர் அவரோட accountல நம்ம வேண்டுதல வச்சுருவர்னு சொன்னாங்க..
ஹ ஹா ஹா.. பச்ச புள்ளைய எப்பிடி எல்லாம் ஏமாத்தி இருகாங்க...

நானும், அதுக்கு அப்புறம் டெய்லி காலைல எழுந்து குளிச்சு முடிச்சவுடனேயே, விநாயகர் கிவில் பொய் சாமி கும்பிட்டு வருவேன்.. இப்பிடியே 10th முடியுற வரைக்கும் பண்ணிட்டேன்.. நல்ல மார்க் வந்துச்சு.. எவளோ மார்க்னு சொல்லி அசிங்க பட விரும்பல..

இப்போ கூட, நான் டெய்லி 10 பைசா எடுத்து கிட்டு பொய் சாமி கும்பிட்ட நிகழ்ச்சி எல்லாம் நெனைக்கும் பொது வேடிக்கையாகவும், அதே சமயம், நான் எப்பிடி நம்பிக்கை வச்சதால, எனக்கு சில நன்மைகள் வந்துச்சு..
அந்த சில நன்மைகள்..
1. என்ன டெய்லி காலைல எழுப்ப வேண்டிய அவசியம் எல்லாம போச்சு..
2. நம்மளும் டெய்லி காணிக்கை போட்டு சாமி கும்பிட்டா, சாமி accountல வச்சு நமக்கு மார்க் போடும்னு நெனச்சு பண்ணிடோம்.. ஆட்டோ மெட்டிக்கா படிக்க ஆரம்பிச்சுட்டேன்..ஆனா படிக்காம தான சாமி மார்க் போடாது..அது வேற விஷயம்.. அது இன்னொரு காலேஜ் செமஸ்டர் அப்போ தான் தெரிஞ்சது..
3. என்ன தான் நம்ம படிச்சு நல்ல எழுதினாலும் நமக்கு ஒரு Internal நம்பிக்கை வரணும்னு சாமி கும்பிட்டாச்சு.. அதுனால தன்னம்பிக்கை வந்துச்சு...

இதுனால நான் என்ன பீல் பண்றேன்னா..
சில மூட நம்பிக்கை மூலமா, நமக்கு நன்மை இருந்தா, அந்த மூட நம்பிக்கைய நல்ல நம்பிக்கைய பண்ணலாம்..

No comments: