Tuesday, December 9, 2008

கோ பெருஞ்சோழன் - பெசிரந்தையர்

என்னடா இவன் இப்பிடி ஒரு டைட்டில் வச்சு Blogla என்ன மொக்கை போட போறன்னு நெனைகுறது தெரியுது..

IT நம்ம மக்கள் ஆபீஸ்ல பாதி நேரம் சும்மா இருக்குது முக்காவாசி எல்லாருக்கும் தெரியும்.. அப்பிடி சும்மா இருக்கும்போது நம்ம மூளை சும்மா இருக்கணும்ல..


ஒரு நாள் நெட்ல ப்ரொவ்ஸ் பண்ணி நம்ம தேரமைல எதாவது பிகர் மடக்கலாம்னு தேடி கிட்டு இருந்தேன்.. அப்போ தான் எனக்கு friendcircles.com நு ஒரு வெப்சைட் தெரிஞ்சது.. சேரி அப்பிடி என்ன தான் அந்த வெப்சைட் இருக்குனு பாக்கலாம்னு அக்கௌன்ட் கிரியாட்பண்ணி லாக்இன் பண்ணேன்..
பல பொண்ணுக்கு சும்மா ஹாய் சொல்லி விட்டு லாக் அவுட் பண்ணிட்டேன்..

நைட் தூங்க செல்லும் முன், ஒரு திருப்தி இருந்தது..


மறுநாள் ஒரு நண்பி பதில் ஹாய் சொல்லி எனக்கு அவளுடைய நட்பு கரத்தை நீட்டினாள்.. நான் பதிலுக்கு குட் மோர்னிங் நு விஷ் பண்ணி விட்டு, அப்பிடியே நம்ம மொக்கையை ஸ்டார்ட் ஆச்சு..

நம்ம நேரம் அந்த நட்பு பெஞ்சில் இருந்தனால பதில் எல்லாம் ரொம்ப வேகமாக வர.. அன்றே நம்ம நட்பு வெதையில் இருந்து சின்ன செடியாக வளர்ந்து விட்டது..


நாம் இருவரும் ஒரு வாரம் இப்படியே பேசி கொண்டு நன்கு அறிமுகம் ஆகி விட்டோம்.. அப்பிடியே ஆபீஸ் மெயில் ID பரிமாற்றம் செய்து கொண்டு, ஆபீஸ் மைலில் பேச ஆரம்பித்தோம்..


கொஞ்ச நாலா கை பேசி நம்பர் மாற்றி கொண்டு, கை பேசில் பேச ஆரம்பிதேன்.. சில நாளிலேயே "சொல்லுடா என் செல்லம்", என்று, என் மேல் அதிக நம்பிக்கையும், பாசமும் காட்ட ஆரம்பித்தால்..


இங்கு முக்கியமான விஷயம் என்னன்னா? நம்ம ட்ரை பண்ணினது, எதாவது சேட்டை பண்ணலாம்னு ஒரு ஐடியா.. ஆனா நடந்தது என்னமோ வேற ஒன்னு..

நம்ம கிட்ட ஒரு பொண்ணு நல்ல பையன்னு நெனச்சு பழக்கம், வைகிரப்போ நாமும் நல்லவனாக மாறிவிடுவோம் என்று எனக்கு புரிய வைத்தவள்.. :-)


அவ கிட்ட பேசி கொண்டே இருக்கலாம்... ரொம்ப நல்ல போன் கவனிச்சு, பாசமா பேசுவா.. ஒரு அம்மா கிட்ட பேசுன பீல் வந்துச்சு.. எனக்கு அது பிடித்து போக, டெய்லி போனில் பேச ஆரம்பித்தோம்..


அது மட்டும் ஒரு காரணம் இல்லை.. அவள் பேச ஆரம்பித்தவுடன் அது என்னவோ தெரியல நம்ம ரொம்ப softa, நல்ல பையன மாறிகிட்டே வந்தேன்..

கொஞ்ச நாள்ல நான் ரொம்ப மாறினது எனக்கு தெரிஞ்சது.. :-)


அவளுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.. நான் எவளவு பாசம் வைத்திருக்கிறேன் என்று? அடிக்கடி அதை கேட்டு கொண்டே இருப்பால்..

அவளின் நட்பில் நான் குழந்தையாக மாறிவிட்டேன் என்று சொல்லலாம்..


எல்லாரும் இப்படி ஒரு நட்பை பெற்று இருக்க வேண்டும்.. தூய்மையான நட்பு..


எங்களின் நட்பு, பேச்சு வெகுவாக, வேகமாக குறைந்தது வேறு சில காரணத்தால்.... அது என்னவோ நாங்கள் பேச வில்லை என்றாலும், எனக்குள் ஒரு ஒரு நாளும், எங்கள் நட்பின் நல்ல எண்ணங்கள், எங்களுக்குள், பேசி கொண்டே இருந்தன..


நாங்கள் நேரில் சந்தித்து கொண்ட தருணங்கள் வெகு குறைவே..

வெறும் நான்கு அல்லது ஐந்து முறை தான் என்றாலும், அவளின் நல்ல நட்பால் எனக்குள் ஒரு சந்தோசம், ஒரு நல்ல என்னணம்.. நல்ல பாசம், வளர்த்து விட்டால்.. இது தான் பின்னாளில், வேறு ஒரு பெண் என் மேல் காதல் வயப்பட, காரணம் ஆனது..


நாங்கள் பேசி சில பல mathangal ஆனாலும், சில பல varuthangal ஆனாலும் எங்கள் நட்பு kuraiyadhu..


இப்படிப்பட்ட நட்பை Engayo கேள்வி பட்ட மாதிரீ இல்ல? தமிழ்ல, சின்ன

Tamilla, Chinna vayasulae patichomae namma கோ பெருஞ்சோழன் - பெசிரந்தையர் நட்பு...

அது தான் எனக்கு gnabagam வருது.. உங்களுக்கு?


Note:

இவர்கள் நட்பில் ஒரு சின்ன வித்யாசம்.. இவர்கள் சில முறை நேரில் பார்த்து இருக்கிறார்கள்.. இது பண்டைய கால நட்பு அல்ல.. அதனால் சற்று விதியை தளர்த்தி வச்சுக்கலாம்.. என்ன நான் சொல்றது..

இது ஒரு உண்மையான நட்பை அனுபவித்து எழுதியது..




No comments: