Monday, December 15, 2008

சென்னை முதல் சென்னை வரை..


நம்ம சங்கத்து உறுபினரும், நம்ம தோழி ஒருவருடைய மணவிழாவை சிறப்பிக்க, நாங்கள் நன்கு பேர், சென்னையில் இருந்து கோவை நகரம் சென்று, நல்ல படியாக திரும்பி வந்ததை தான் இந்த blogla எழுதபோறோம்..


Dec 5, மாலை சரியா ஒரு 6:30 மணிக்கு ரூம்ல இருந்து கெளம்பி, நம்ம மூர்த்தி ரூம்க்கு போய், பிக் பண்ணி கிட்டு, கலெக்டர் நகர் பஸ் ஸ்டாப் வரதுக்குள்ள, மணி 7:00 PM.

மூர்த்தி, நம்ம சங்கதுல பாக்க, அமைதியா இருக்குற மாதிரீ தெரியும்.. ஆனா பயங்கரமா யோசிச்சு தான் எந்த வேலையும் பண்ணுவான். நல்ல பையன்கள் லிஸ்ட்ல இவனும் ஒருத்தன்.. தப்பு பண்ணனும்னு, நெனச்சா கூட, இவனுக்கு அமைறது இல்ல.. இப்போ தான் தண்ணி அடிக்க, தம் அடிக்க பழகி கிட்டு இருக்கான்.. இவனுக்கு இருக்குற ஒரே ஆசை, நெக்ஸ்ட் ஹேர் ஸ்டைல் வந்து வழுக்கையா இருக்குது வரனும்குறது தான்.. என்ன நம்ம பாஸ் தலைல கொஞ்ச கொஞ்சமா, எல்லா முடியும் கொட்டி கிட்டே வர்றது இல்ல.. இவன ஓட்டுறது இவனுக்கே தெரியாம ரெண்டு வருஷம் ஒருத்தன் இவன ஒட்டி இருந்திருக்கான் , இவன் எப்பேர் பட்டவன்!!!!!!!!!!!!!


நானும் மூர்த்யும், சென்ட்ரல் போற பஸ்ல ஏறி ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு, செட்டில் ஆனோம்..(ரெண்டு டிக்கெட் 18 ரூபா, என்ன கொடும சார் இது..) நாங்க சென்ட்ரல் சிக்கரம் போயிட்டு, ஹோட்டல் சரவணா பவன்ல சாப்ட உட்கார்தோம்.. செம்ம பசி, நமக்கு evening டிபன் சாப்டு பழக்கம் ஆய்ச்சு இல்ல!!!

சென்ட்ரல்ல, பயங்கர செக்கிங், மூணு இடத்துல டிக்கெட் கேட்டுட்டு தான், நம்மள வுள்ள விட்டாங்க.. நாங்க சாப்டு முடிக்குதுகுள்ள, நம்ம சங்கத்து மத்த ரெண்டு மக்களும் சென்ட்ரல் வந்து, டிரைன்ல செட்டில் ஆகி இருந்தாங்க..

நாங்க வுள்ள போனவுடனயே பாஸ், எப்பிடி பாஸ் இப்பிடி terrora டிரஸ் பண்ணி இருக்கீங்கனு மொக்கைய ஆரம்பிச்சு வச்சான் நம்ம சிவா..
சிவா, நம்ம சங்கம் இவனுக்கு ரொம்ப கடமை பட்டு இருக்கு.. சங்கத்தை create செய்தவன்.. சும்மா இருந்த ஒரு அப்பாவி பையன, நம்ம ரௌடி ஆகுரோம்னு சொல்லி, அனாவசியமா மொக்கை போட்டு, மொக்கை போட சொல்லி குடுத்து, ஒருத்தன் லைப் ஸ்டைல் மாதின்ன பெருமை நம்ம சிவாவை சேரும். இது போக தமிழ் மேல் ஆர்வம், பற்று...

சிவா அப்பிடி மாத்துன பாஸ் தான் நம்ம அசோக்.. நல்ல பையன இருந்தான், ஆனா இப்போ இல்லையே!! ஆள் குன்டா.. பாக்க ஒரு டைப்ஆ இருப்பான்..

நம்ம அசோக்கு இப்போதைக்கு ஒரே ஆசை எப்பிடியாவது நம்ம ஜல புல ஜல்சா பண்ணனும்.. நாங்க ரயில்ல மீட் பண்ணதுல இருந்து, போயிட்டு திருப்பி வர்ற வரைக்கும், சொல்லி கிட்டே இருந்தான்.. ஆனா என்ன பண்றது நம்ம தான் நல்லவனுங்க ஆச்சே, ஒன்னுமே பண்ணாம திருப்பி பத்திரமா கூட்டிகிட்டு வந்துடோம்... ஹா ஹா..


எல்லாரும் நீலகிரி எக்ஸ்பிரஸ்இல் செட்டில் ஆகும் போது மணி 8:50. நாங்கள் வந்த சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டது.. வழக்கமான மொக்கை உடன் ஆபீஸ்ல நடக்கும் recession பற்றிய பரபரப்பான விசயங்களை பேசி விட்டு நானும், சில பல கட்டை, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி ஒட்டி விட்டு, மூர்தயும், நானும் அப்பேர் பெர்த்தில் தூங்க சென்றோம்.. சிவா அண்ட் அசோக் ஒரு வாக் போன எதாவது சிக்கும் என்று கெளம்பி சென்றார்கள்..


மறுநாள் Dec 6th மணிக்கு மணிக்கு கோவை சேர்ந்தோம்.. ரயிலில் வந்த ஒரு நண்பர், எங்களை மெட்டு பாளையம், செல்ல பஸ் ஏற்றி விட்டு, தானும் மெட்டு பாளையம் சென்றார்.. மேட்டுபாளையம் சின்ன அழகான ஊர்.. எங்கள் பிளான் படி சாமான்களை எல்லாம் அசோகின் அண்ணன் friends relative வீட்டில் வைத்து விட்டு, பிளாக் தண்டர் போவது.. இந்த நாள் மிக அருமையான நாள்.. அப்பிடி மாற்றியது நாங்கள் மீட் செய்த அந்த Friend of Friend பாமிலி...
விருந்தோம்பல் என்ற தமிழ் வார்த்தைக்கு மிக சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு முறை அவர்கள் வீட்டிற்கு, விருந்தினராக சென்று வாருங்கள்!!! அழகான வீடு, மூன்று நாய்கள்.. ஒன்று செம்ம பெருசு.. என்ன பேச்சு பேசுற நம்ம சிவாவே, திரௌசர் கழறும், அளவிற்கு பயந்து டான்.. மொட்டை மாடி மேல் நாங்கள் அந்த நாய்களுடன், சற்று நேரம் விளையாடினோம்.. நான் மட்டும் பய படவே இல்லையே!!! ஹா ஹா..
மிக முக்கியமான நபர்கள், அந்த வீட்டில் இருந்த இரண்டு சின்ன குட்டிஸ்ஸ்ஸ்ஸ்.... மிக மிக அழகாக, அறிவாக.. சூப்பரா இருந்தார்கள்.. எங்களின் காலை மற்றும் மாலை நேரம் அந்த குழந்தைகளுடன் இனிமையாக அமைந்தது.. வாவ்... தட்ஸ் a wonderful டைம்..
காலை உணவை, அந்த புதிய நண்பர்கள் வீட்டில் முடித்து கொண்டு, நாங்கள் நால்வரும் + friend of friend's Akka பிளாக் தண்டர் கெளம்பினோம்.. முதலில், dry கேம்ஸ் எல்லாம் முடித்து விட்டு, பின்னர், லஞ்ச் பிறகு, வாட்டர் கேம்ஸ் விளையாடி விட்டு, செம்ம களைப்புடன்.. நண்பர் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.. அந்த friend of friend வீட்டில், எங்களை நன்றாக கவனித்து கொண்டார்கள்..

சற்று நேரம் இளைப்பாறி விட்டு, ப்ரொவ்சிங், கோவில், மொபைல் டாப் அப், எல்லாம் முடித்து கொண்டு, மேட்டுபாளையம் சுற்றி விட்டு, மறுபடியும், கோவைகு கெளம்பினோம்..

கோவையில் ஹோட்டல் கோவை ரெசிடன்சில ரூம் புக் செய்ய பட்டு இருந்த, ரூமில் நாங்கள் சென்று செட்டில் ஆனோம்.. என்ன தான் tired இருந்தாலும் தண்ணி அடிச்சுடு தான் படுக்கணும் என்று சங்கம் ஆசை பட.. எல்லாரும் சென்று, தேவைக்கு மேல் சரக்கு வாங்கி கொண்டு வந்து, அடிக்க ஆரம்பிதோம்.. நேரம் சரியாக 12 தொடும் பொழுது.. நம்ம நண்பர்கள் எனக்கு பர்த்டே கேக் கொடுத்து, என் பிறந்த நாள் கொண்டாடினோம்.. ஆம் Dec 7, 2008, எனக்கு 25 வது பிறந்த நாளை, கோவையில், ஒரு ஹோடேலில் எனது நண்பர்கள் மூவருடன்.. எல்லாம் முடித்து தூங்கும் பொழுது மணி 2 க்கு மேல் ஆகி விட்டு இருந்தது..


Dec 7th காலை ஒரு ஒன்பது மணி அளவில் எழுந்து ரெடி ஆகி, கோவை அருகில் உள்ள தியான லிங்கம் செல்ல பிளான்.. ஆனால் எப்படியோ, பிளான் தள்ள பட்டு, மதியம் ஒரு மணி அளவில், நாங்கள் + என் அண்ணன் பையன் கால் டாக்ஸில் கெளம்பினோம்.. சுமார் இரண்டு மணி அளவில் சென்றடைந்தோம்.. அந்த இடம், சற்று அமைதியாக இருந்தது.. உள்ளே செல்லும் முன்பு, முதல் முறையாக வரும் மக்களுக்கு, உள்ள என்ன இருக்கிறது என்பது விளக்க பட்டது.. உள்ளே மிக அருமையாக இருந்தது..
மூன்று விதமான உணர்ச்சிகளை காட்டும் லிங்கம் அமைக்க பட்டு இருந்தது.. அதற்க்கு பின்னர் தீர்த்த லிங்கம்.... அந்த தீர்த்த லிங்கம் தரை மட்டத்தில் இருந்து 25 அடி கிழே அமைக்க பட்டு, 8 அடி தீர்த்தத்திற்கு உள்ளே இருந்தது.. அவர்களே உள்ளே செல்ல மாற்று வுடை கொடுகிறார்கள்.. மிக மிக அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள பட்டோம்.... அமைதி மட்டும் தான் அங்கு நிலவ வேண்டும் என்று அங்கு மிக கவனமாக இருக்கிறார்கள்.. மித்த கோவிலை போல இருக்காமல், சற்றே வித்தியாசமான கோவில்.. தீர்த்த லிங்கம் முடித்து விட்டு, மெயின் லிங்கம் தான் நம்ம தியான லிங்கம் பார்க்க சென்றோம்.. தியான லிங்கம் உள்ள இடத்தில், நடக்கும் பொழுது சத்தம் வர கூடாதென, நம்ம pant கூட தூக்கி விட சொல்கிறார்கள்.. :-) அங்கே தியானம் செய்து விட்டு, வெளிய வரும் பொழுது மணி 2:30 க்கு மேல்..பசி பிக்க, முன் கொண்டு வந்த பார்சல் + எக்ஸ்ட்ரா எல்லாம் முடித்து விட்டு, மீண்டும் ரூம்க்கு கெளம்பினோம்..

மாலை எங்களுக்கு, தோழி வீட்டில் விருந்து கூப்பிட்டு இருந்ததால், ஒரு 6:30 மணிக்கு தயார் செய்து கொண்டு, ஒரு 7:30 மணி அளவில் சென்று சேர்த்தோம்..

வீடு நல்ல அலங்காரம் செய்ய பட்டு, நிலா வானில், நட்சத்திராங்களால் கோர்க்கப்பட்டு, மின்னி கொண்டு இருந்ததால், வீடு கண்டு பிடிக்க கொஞ்சம் கூட கஷ்ட படவில்லை.. அங்கே வாசலில் எங்கள் தோழி, அலங்கரிக்க பட்டு, பார்த்தும் கை கூப்பி வரவேற்று இருந்தால்.. சேலை கட்டி, கல்யாண கலையுடன்.. பெரியோர்கள் வைத்த திருநீர், குங்குமம், இத்துடன் மேக் அப் என்று.. ஒரே அலப்பறைதான் போங்க..

காப்பி எல்லாம் குடித்து விட்டு.. சற்று நேரம் உட்கார்ந்து relax செய்து கொண்டு இருந்தோம்.. பின்னர் dinner ஒரு கட்டு கட்டி விட்டு.. ரூம் போகவா இல்லை வாரணம் ஆயிரம் படம் செல்லவா என்ற குழப்பத்தில், சினிமா வரை சென்று.. பின்னர் ஒரு வழியாக ரூம் பொய் சேர்ந்தோம்..மறுநாள் காலை 6:30 மணிக்கு கல்யாணும், சீக்கிரம் வாங்கடா என்று செல்லமாக ஒரு கட்டளையுடன் நினைவு படுத்தினால்..

Dec 8th, காலை 5 மணிக்கு எல்லாம் நான் எழுந்து விட்டேன்.. ரொம்ப சுறுசுறுப்புல!!!! நான் முதலில் ரெடி ஆகி கொண்டு பின், மூர்த்தி, சிவா, அசோக் எல்லாரும் ரெடி ஆகி முடிய நேரம் 6:00. இதே ஒரு நாலு பொண்ணுங்க ஒரே ரூம்ல ஒரே பாத்ரூம் கொடுத்து, ரெடி பண்ண சொன்ன அவங்க நைட்புல்லா, தூங்காம இருந்து ரெடி பண்ண கூட காலைல கொஞ்ச கஷ்டம் தான்.. ஹா ஹா..

ஒரு கால் டாக்ஸி பிடித்து கொண்டு, கல்யாணம் நடக்கும், R S Puram, காமாச்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம்.. வாவ்.. கோவை மாநகரில்.. எல்லா கோவில்களும் நன்றாக பராமரிக்க படுகின்றன..

எங்கள் தோழி கல்யாண கோலத்தில், photo க்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தால்.. ஐயர் வேகமாக மந்திரங்களை எல்லாம் சொல்லி முடித்து, சாஸ்திர, சம்ப்ரதயங்களை எல்லாம் முடித்து, தாலி எடுத்து, கட்ட சொல்லும் பொது மணி சரியாக 7:06. தாலி பூட்ட பட்டதும், சில துளி கண்ணீர்கள் வந்து சென்றன மனபெண்னிடன் இருந்து.. ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கிய தருணங்கள்..

இன்னாரின் மகள் என்று அழைக்கப்பட்டவள், இன்று முதல் இன்னாரின் மனைவி என்று அழைக்க.. Identity யை மாற்றி/விட்டு கொடுக்க.. தன் தாய் தந்தை விட்டு பிரிய..தன் சின்ன சின்ன ஆசைகளை இழக்க..இப்படி பல காரணங்கள்..

அவள் கண் கலங்கிய விதத்தை, 25 அத்தியாயங்கள் வைத்து ஒரு இலக்கியமே எழுதி விடுவான் நம் கம்பன்.. அப்பிடி ஆயிரம் அர்த்தங்கள் அந்த கண்ணீர் துளிகளில்..

கல்யாணம் முடித்தவுடன், அடுத்ததாக எனக்கு செம்ம பசி.. எப்போடா ஹோட்டல் கட்டுவங்கனு நம்ம மக்கள் எல்லாம் ரெடியா இருக்க.. ஒரு நல்ல ஆனந்தாஸ் என்ற சைவ ஹோடேலில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.. நன்றாக சாப்பிட்டு விட்டு, நேராக ஹோட்டல் ரூம் சென்று ஆளுக்கு ஆளுக்கு தூங்க ஆரம்பித்தார்கள்..

நம்ம அசோக் வீடு குமாரபாளையம், கோவையில் இருந்து பக்கம்.. அவன் வீட்டிற்கு சென்று நேராக ஈரோடு வந்து சேர்வதாக சொல்லி கெளம்பினான்..

சிவாவும், நானும் அவர் அவர் சொந்த பந்தங்களை பார்த்து விட்டு வர சென்றோம்.. எல்லாம் முடித்து இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறும் பொது ஒரு sowmiya என்று ஒரு அழகான பெண் நம்ம பக்கது கூபே.. எப்பிடி பேச முடியும், கூட அவங்க அம்மா, அது இல்லாம எப்போடா சான்ஸ் கெடைக்கும்னு ரெடியா இருந்த சில அல்ரைய்.. சில்ரைய்.. சரி விடு என்று அப்பெர்ல ஏறி தூக்கம் போட ஆரம்பித்தோம்.. காலை 6:30 மணிக்கு மீண்டும் நம்ம கச கச சென்னை வந்து சேர்த்தோம்..

மூன்று நாட்கள் மிக அருமையாக முடிந்தது.

No comments: