Tuesday, January 6, 2009

வலி....

நான் blog எழுத ஆரம்பிச்சதே இந்த blog எழுதனும்னு தான்.. ஏன்ன வாழ்கைல நம்மள ரொம்ப பாதிச்ச சில விசயங்கள யார்கிட்டயும் ஷேர் பண்ணிகாம இருக்கும் பொது அது இன்னும் நம்மள ரொம்ப பாதிக்க ஆரம்பிச்சுடுது...


எல்லாருக்கும் காலேஜ் லைப் ஒரு தனிதுவமான பசுமை என்றுமே மாறத அனுபவம்..எனக்கும் அப்பிடி தான்..


பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழில் படித்து முடித்து விட்டு, ஒரு டிரஸ்ட் ஆதரவில் நானும் இன்ஜினியரிங் ECE மதுரைல (நம்ம சொந்த ஊர்ல படிக்க வேண்டி ஆச்சு.. என்ன பண்றது!!!!) படிக்க சென்றேன்..
அங்கு தான் எனக்கு பல புதிய நண்பர்கள் அறிமுகம் ஆனது..
அப்பிடி ஆனவர்களில், நான், கார்த்தி, சரவணன் மூன்று பெரும் ஒரே கிளாஸ், ஒரே பெஞ்ச், ஒன்றாக ப்ராஜெக்ட் என்று மிக நெருக்கமான நண்பர்கள்..
நாங்கள் மூவரும், கிளாஸ் ரூமில் யாராவது ஒருவரை ஒட்டி, சிரித்து கொண்டே இருப்போம்..


சரவணன், தனக்கு என்ன வேண்டும், தான் எப்படி இருக்க வேண்டும், இப்பிடி எல்லாமே பெர்பெக்ட்.. எனக்கு தெரிஞ்சு, யாருக்கும் கெட்டது நினைக்காமல், எப்படி எதையும் சமாளிக்க கூடிய நல்ல நண்பன்.. மிகவும் அதிர்ஷ்டக்காரன்..
கார்த்தி நன்றாக படிப்பான். ஆனால் கை எழுத்து மிக மோசமாக இருக்கும். எங்கள் பல்கலை கழகத்தில் கை எழுத்து நன்றாக இருந்தால் ஒன்றும் எழுதாமல் மதிப்பெண் பெற்று விடலாம்.. இவன் என்ன தான் மாங்கு மாங்கு என்று எழுதினாலும் இவனுக்கு கஷ்டம் தான்.... கை எழுத்து மோசமாக இருந்தால், தலை எழுத்து நன்றாக இருக்கும் என்று எங்கள் ஊர்ல சொல்லுவார்கள்.. ஹா ஹா..


கார்த்திக் 10 ஆம் வகுப்பு வரை பம்பாயில் படித்து விட்டு, +1, +2 இங்கே மதுரைல படிக்க வந்தான்.. அங்கே புல்லா மாடர்ன் பிகுர் பார்த்து விட்டு இங்கே வந்து, பூ பொட்டு வச்சு, நீட்டா சுடிதார் போட்ட ஒரு பொண்ண பார்த்தவுடனே மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பிச்சுடுச்சு..

நாங்க படிச்ச அதே காலேஜ்ல அவளும் ஜுனியரா சேர்ந்ததால இவனுக்கு செம்ம சந்தோசம்.. டெய்லி அவள பார்க்க வெயிட் பண்றது.. காதலுக்காக என்ன வெல்லமோ செய்வான்.. அவ கிளாஸ் பக்கம் சும்மா நடக்குறது.. அவ வரும் போதும், கிராஸ் பண்ணும் போதும் ஏக பட்ட ரியாக்சன் கொடுக்குறது.. அவ வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பொங்கல் கடைல எங்களுக்கு ப்ரீ டிபன்.. இப்பிடி நெறைய சொல்லலாம்.. அதுக்கு தனிய எழுதனும்.. இவன் பண்றத பாக்கவே செம்ம காமெடியா இருக்கும்..


இப்பிடி எல்லாம் ஜாலியா காலேஜ் லைப் என்ஜாய் பண்ணி விட்டு, நாங்க பெங்களூர் போயி வேலை தேட போனோம்..அங்கே நானும் கார்த்திக் ஒரே ரூம் தான்.. சின்ன 10 X 10 ரூம்ல தோராயமா 7 பேர், 8 பேர் எல்லாம் இருந்து வேலை தேடி கிட்டு இருந்தோம்.. அவ்வளவு சின்ன இடத்திலும் எங்களுக்கு வசதி குறைவாக தோன்றவில்லை.. சந்தோசமா இருந்து, படிப்போம்.. ஒரு ஒரு இன்டெர்விவ் போயி அடி வாங்கி திரும்பி வந்து ஒரு வெறியோடு படித்த காலம் அது..


நானும் ஒரு வழியாக சென்னையில் ஒரு கம்பெனியில் Dec மாத கடைசி வாரத்தில் offer வங்கி விட்டேன்.. எனக்கு பின் சரவணனும் என் கம்பெனியில் சேர்ந்து விட்டான்.. கார்த்திக் ஒரு வழியாக பெங்களூர்ல ஒரு கம்பெனில சேர்ந்தான்..
இப்படி எல்லாரும் ஒரு வழியா செட்டில் ஆகி Corporate Culture புரிந்து கொள்ள ஆரம்பிச்சு கிட்டு இருந்த நேரம்.. எங்கே நம்ம கொஞ்சம் சந்தோசமா இருந்தாலும் ஆண்டவன் தலைல ஒரு கொட்டு கொட்டி, நம்மள அழவச்சு ஒக்கார வச்சுருவான்லே..


அப்பிடி தான் நடந்தது அந்த நிகழ்ச்சி.. ஆம், என் நண்பனின் அப்பா, திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து பம்பாய்ல இறந்து விட்டார்னு..அதுவும் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருக்கைல.. இப்போவும் அந்த கொடுரமான நாட்களை நெனச்சாலே, சில மணி நேரம் ஒன்றும் செய்ய முடிவதில்லை.. என் நண்பனோ விட்டிற்கு ஒரே பையன்.. அவர்கள் வீடு இடித்து விட்டு புதுசா கட்டி கொண்டு இருந்த நேரம்.. தங்கையோ காலேஜ்ல படிச்சு கிட்டு இருந்தா.. இப்படி பட்ட நேரத்துல திடீர்னு உங்க கிட்ட இருந்து உங்களுக்கு புடிச்ச, குடும்பத்த வழி நடத்தும் அப்பா இல்லேன்னா எப்படி இருக்கும்.. என்னை மிகவும் பதிச்ச ஒரு சம்பவம்.. யாருக்கும் இப்பிடி நடக்க கூடாதென நான் பல முறை கடவுளிடம் வேண்டிய தருணங்கள்..

நான் மற்றும் என் நண்பர்கள் எல்லாரும் சென்னையில் இருந்து மதுரைக்கு விஷயம் தெரிந்தவுடனேயே கெளம்பினோம்... என் அக்காவின் கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு பத்திரிக்கை பூஜை செய்யப்பட்டு விட்டதால் எங்கள் வீட்டில் இருந்து என் நண்பனின் அப்பாவின் இறுதி பயணத்திற்கு செல்ல முடியவில்லை.. நான் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தும் என்னால் செல்ல முடிய வில்லையே என வருந்தினேன்..

இன்னும் இது போன்ற நம்பிக்கைகள் சில சமயங்களில் என்னால் ஏற்று கொள்ள முடிவதில்லை.. அதை விட, கொடுமை என்னால் என் நண்பனுக்கு ஆறுதலோ சொல்ல தைரியம் கொஞ்சம் கூட வர வில்லை.. ஏன்ன நானே ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஆம் என்னால் இயல்பாக அவனுடன் பேச முடியவில்லை..

இப்படியாக கொஞ்ச நாள் போன பிறகு பேசலாம், கொஞ்ச நாள் போன பிறகு பேசலாம் என்று தினம் தினம் எண்ணிக்கொண்டு இருந்தேன்.. அவனுக்கோ நான் ஒரு முறை கூட கால் பண்ண வில்லையே என்று எண்ணம் இருந்திருக்கும்.. இப்போது கூட என்னால் இதை கார்த்திக் கிட்ட விளக்க தைரியம் இல்லை..

கொஞ்ச நாளில் என்னோட இருந்த காண்டக்ட் சுத்தமாக னென்று போனது.. எனக்கு என்னமோ நம்மால் தான் இப்படி ஆச்சுன்னு வருத்தம்.. என்னோட நெருங்கிய சில தோழிகளுக்கு மட்டும், நான் டெய்லி வருத்தப்படும் விஷயம் தெரியும்.. அவர்களோ, டேய் நீ ஒன்னும் கவலை படாதே, உன் நண்பன் கிட்ட கால் பண்ணி பேசு என்பார்கள்.. கிட்டதட்ட இரண்டு வருடங்கள் இருக்கும், வேறு சில நண்பர்கள் மூலமாக கார்த்திக் எப்படி இருக்கான், அவங்க அம்மா, எப்படி இருகாங்க என்று கேட்டு தெரிந்து கொள்ளவதோடு நாட்கள் ஓடி கொண்டு இருந்தது..


அதுக்கு அப்புறம் அவனுக்கு என் மேல இருந்த கோவம் கொறஞ்சு போச்சா இல்ல, என்ன ஆச்சோ, நாங்க இருவரும் மத்த நண்பர்கள் சேர்ந்து மீட் பண்ணிக்க சூழ்நிலை கிடைத்தது.. Thank God.. அப்புறம் கொஞ்ச கொஞ்சமா எங்க நட்பு பழைய விசயங்களை எல்லாம் அசை போட ஆரம்பிச்சு.. மீண்டும் துளிர் விட்டது.. என்னமோ திடிர்னு ஒரு பூஞ்சோலை பாலைவனம் ஆகி சில வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பெரிய தீம் பார்க் போல ஓபன் ஆனது எங்களின் நட்பு...

என்னை பொறுத்தவரை நட்பு என்றும் அழியாது..என்ன தான் நான் பேசாமல் இருந்தாலும், என்னால் நண்பனுக்காக ஒரு நாளில் சில நிமிடங்கள் யோசிக்கமலோ, வருதபடமலோ, அல்லது அவன் எப்போ என்ன காமெடி பண்ணி கிட்டு இருப்பான் என்றோ நினைக்காமல் இருந்தது இல்லை..


சில விஷயங்கள் வெளியில் சொல்ல முடியவில்லை என்றால் அது நம்மள ரொம்ப பாதிக்கும்... அப்படி என்ன பாதித்த நிகழ்ச்சில இதுவும் ஒன்னு...

FRIENDS FOREVER....

F - Few

R - Relations

I - In

E - Earth

N - Never

D - Dies.....

2 comments:

ஸ்ரீவி சிவா said...

bossu........ thaaru maaraa na topic ellaam eluthara.keep going.
Innum un eluthu nadai konjam improve panninaa kalakkalaam.

Vijayaraj said...

Bala..Nalla irukkuda...Kalakkura Chanduru.....Innum unkitta irundhu neeraya ethir parkkiren.