Tuesday, December 9, 2008

அம்மா.. My Heaven..


எல்லாருக்கும் அம்மா நிறைய பிடிக்கும்..
எனக்கும் ரெம்ப பிடிக்கும்..

அம்மாக்கு, தன் பையன் எவளோ பெரிய பையன வளந்தாலும் எப்போவும் ஒரு கொளந்த தான்.. எங்க அம்மாவும் அப்பிடி தான்.. ரோம்ப பாசம்..
இந்த Bloga எங்க அம்மாவுக்கு dedicate பண்றேன்..
அம்மா "I LOVE YOU"..

நெறைய பேர் என்கிட்டே கேட்டுருகங்க.. " டேய்.. நீ மட்டும் எப்போவும் எப்பிடி சந்தோசமா smile பண்ணி கிட்டே இருக்க?"

நான் எப்போவும் சந்தோசமா இருக்க காரணம் எங்க அம்மா தான்..
ரொம்ப சிம்பிள் எப்போ, எந்த கஷ்டம் வந்தாலும், எங்க அம்மா எல்லாமே நல்லதுக்கு தான் நடக்குது.. ஒன்னும் கவலை பட வேண்டாம்னு சொல்லு வாங்க..

சொல்றது ரொம்ப ஈஸீ ஆனா உண்மைல கஷ்டம் வரப்போ நம்ம படுற கஷ்டம் இருக்கே.. உஸ்ஸ்.. அதுவும் நாளைக்கு code டெலிவரி வச்சுக்கிட்டு இருக்கும் போது புதுசா ஒரு defect ரைஸ் பண்ணா நம்ம தலையே வெடிச்சுரும்.. அது கூட பரவ இல்ல.. பின்னாடியே Manager மாங்கோ தலையன் வந்து நிப்பான் பாருங்க.. உஸ்ஸ்ஸ்...

எங்க அம்மா ஒரு "Hard Worker".. நாங்க சின்ன வயசுல இருந்தப்போ எங்க அஞ்சு பேர் + தாத்தா + Appanu இப்பிடி எட்டு பேர பார்த்து கிட்டு.. அது போக எங்க அப்பாவா விட அதிகமா வீட்ல இருந்து தையல் செஞ்சு சம்பாதிச்சு எங்களுக்கு ஸ்கூல் fee, வெளையாட காசு, மிட்டாய், புது டிரஸ்நு, ஒரு குறை எல்லாம வளர்த்தாங்க..
எனக்கு எப்போவும் நெனச்சு பார்குறப்போ கண்ணுல கண்ணீர் வருது..

எங்க பெரியம்மா பொண்ணு அடிக்கடி சொல்லுவாங்க. டேய் உங்க அம்மாக்கு ரொம்ப தைரியம், கடவுள் நம்பிக்கை.. எப்போ எந்த கஷ்டம், இருந்த கூட மேல இருக்குறவன் நம்மள பார்துபான்னு சொல்லிட்டு கவலை படமா போய்டுவாங்க.. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும்.. எப்பிடி நாலு பொண்ண வச்சுகிட்டு , எவளோ அசால்டா இருக்கானு..

நிறைய பேர் வந்து இந்த பொண்ணுகள வேலைக்கு அனுப்புனா வெட்டு செலவுக்கு ஹெல்பா இருக்கும்னு, அட்வைஸ் பண்ணி இருகாங்க..

எங்க அம்மா அவளவு படிக்கல.. ஆனா சின்ன பசங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.. நாளைக்கு அது தான் அவங்கள நல்ல நெலமைக்கு போக உதவும்னு சொல்லி.. கஷ்ட பட்டு படிக்க வச்சு இருகாங்க..

எனக்கு தெரிஞ்சு எங்க அம்மா thoughts fulla நம்ம பிள்ளை எல்லாரும் நல்ல இருக்கனும்.. நல்ல எடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.. இத மனசுல எப்போவும் வச்சு கிட்டு, நாங்க எல்லாரும் நல்ல இருக்கணும்னு, கோவில் கோவிலா வேண்டிகிட்டு இருகாங்க..

இது என்னோட லைப் ல மட்டும் இல்ல, நெறைய பேர் இப்பிடி இருப்பாங்கனு எனக்கு நல்ல தெரியும்.. :-)

ஆனா ஒரு விஷயம் எங்க அம்மா மறந்துட்டாங்க..
என்ன தான் உள்ள பாசம் இருந்தாலும், அத வெளிய சில சமயங்கள்ல காட்ட மறந்தநல, வீட்ல இருக்குறப்போ கொஞ்சம் சண்டை வரும், எங்க அக்காவுக்கு அம்மா பண்றது கொஞ்சம் conflict ஆகும்.. I guess that is common, when u are more educated, and working in IT culture..
எங்க அம்மாக்கு, பிள்ளைங்க சாப்பாடு, பிள்ளைங்க நல்ல இருக்கணும்னு கோவில், அவங்க பேத்தி, இப்பிடி நிறைய நேரம் செலவு பண்றதால.. வெளிய வேலைக்கு போயிட்டு வர்ற அக்கா கூட பாசமா டைம் செலவு பண்ண முடியலனு நெனைக்குறேன்..

அம்மா ப்ளீஸ் உங்க அன்ப வெளிய கட்டுங்க.. :-)

எங்க வீட்ல எப்போவும் weekends na யாராவது வருவாங்க.. ஒரே கூட்டமா ஜாலியா இருக்கும்... இப்போ எல்லாம் ஆளுக்கு ஒரு ஊர்ல இருந்துகிட்டு.. அப்போ அப்போ போன் ல பேசிகிட்டு.. ஹ்ம்ம்..

ரொம்ப மொக்கை போட்டசுனு நெனைக்குறேன்.. இப்போதைக்கு இது போதும்..

MY HOME IS MY HEAVEN... :-)























No comments: